UAE Tamil Web

நெகிழ வைத்த துபாய் அதிகாரிகள்: கொல்லப்பட்ட இந்திய தம்பதியின் மகள்களுக்கு வழங்கப்பட்ட கோல்டன் விசா.!

visa

குற்ற சம்பவம் ஒன்றில் கொலை செய்யப்பட்ட இந்திய தம்பதியினரின் மகள்களுக்கு அமீரகத்தில் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

- Advertisment -

துபாயில் வில்லா ஒன்றில் நிகழ்ந்த கிரிமினல் சம்பவத்தில் இரு மகள்களை கொண்ட இந்திய தம்பதியர் கொல்லப்பட்டனர். கடந்த ஜூன் மாதம் இந்திய தம்பதிகளான ஹிரென் அதியா மற்றும் விதி அதியா இருவரும் பாகிஸ்தானை சேர்ந்த இளைஞரால் சுமார் 34 முறை கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டனர். ஏன், எதற்காக இந்த கொடூரம் நிகழ்த்தப்பட்டது என்ற முழு விவரம் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

இந்த கிரிமினல் சம்பவத்தில் பெற்றோரை இழந்த 2 இந்திய சகோதரிகளுக்கு 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசாவை துபாய் வழங்கியுள்ளது. இரு பெண்களின் தாத்தாவும் கோல்டன் விசாவைப் பெற்றுள்ளார்.

மேலும் பெற்றோரை இழந்து தவிக்கும் இந்த 2 சகோதரிகளின் கல்வி மற்றும் தங்குமிடம் தொடர்பான தேவைகள் அனைத்தும் முழுமையாக கவனித்து கொள்ளப்படும் என்று GDRFA மற்றும் துபாய் காவல்துறை அறிவித்துள்ளன. GDRFA ஒத்துழைப்புடன் துபாய் காவல்துறை இரு இந்திய சகோதரிகள் மற்றும் அவர்களது தாத்தாவை நேரில் அழைத்து வரவேற்று, அவர்களுக்கான கோல்டன் விசாவை ஒப்படைத்தது. இந்த நடவடிக்கை பாதிக்கப்பட்ட சகோதரிகள் அமீரகத்தில் தங்கள் படிப்பை முடிக்க உதவுவதை நோக்கமாக கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரு பெண்களும் கனேடிய பல்கலைக்கழகத்தில் முழு உதவித்தொகை பெற்றுள்ளனர்.

ஏன் இந்த கருணை.?

தனது இரு மகள்களும் அமீரகத்தில் படிப்பை முடிக்க வேண்டும் என்பதே அவர்களின் மறைந்த தந்தை ஹிரென் அதியாவின் விருப்பமாக இருந்துள்ளது. இதனை அறிந்து கொண்ட பின் துபாய் காவல்துறை பெற்றோரை இழந்த இரு சகோதரிகளுக்கும் மற்றும் அவர்களை கவனித்து கொள்ளும் அவர்களது தாத்தாவிற்கும், மறைந்த ஹிரென் அதியாவின் ஆசையை நிறைவேற்றும் வகையில் கோல்டன் விசா வழங்குவதற்கான முயற்சியை முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.