அமீரகத்தில் 100 பேருக்கு 27.07 என்ற டோஸ்கள் வீதம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. உலகளவில் பார்க்கும்போது அமீரகம் தினசரி கொரோனா தடுப்பூசி வினியோகத்தில் இஸ்ரேலுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் உள்ளது. தற்போது வரை அமீரகத்தில் 26.7 லட்சம் பேருக்கு தடுப்பூசியானது வழங்கப்பட்டிருக்கிறது.
சலுகைகள்
கொரோனா தடுப்பூசித் திட்டத்தை துரிதப்படுத்தும் நோக்கில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அரசு ஊழியர்களுக்கான கட்டாய PCR பரிசோதனை (7 நாட்களுக்கு ஒருமுறை) அறிவிப்பில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் குறித்து கீழே காணலாம்.
டிரைவிங் கிளாஸ்
கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட கார்டை காட்டினால் போதும், உங்களுக்கு ஓட்டுனர் பயிற்சி கட்டணத்தில் 10 சதவிகித தள்ளுபடி வழங்கப்படும் என எமிரேட்ஸ் டிரைவிங் இன்ஸ்டிட்யூட் (Emirates Driving Institute) நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
View this post on Instagram
இலவச காபி
கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்டவர்களுக்கு பிளாக் காபி இலவசம் என அறிவித்திருக்கிறது கபே ரிஸ்ட்ரேட்டோ (Café Ristretto). பால் கலந்த காபிக்கு 50 சதவிகித தள்ளுபடி உண்டு.
View this post on Instagram
இலவச டாக்சி
துபாயில் நீங்கள் எங்கிருந்தாலும் குறிப்பிட்ட கொரோனா தடுப்பூசி மையத்திற்கு செல்வதற்கான டாக்சி பயணத்தை இலவசமாக அளிக்கிறது ஹாலா டாக்சி. இதுகுறித்து மேலும் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
பயண கட்டணத்தில் தள்ளுபடி
அமீரகத்தில் கொரோனா தடுப்பூசி மையத்திலிருந்து வீட்டிற்கோ அல்லது வீட்டிலிருந்து தடுப்பூசி மையத்திற்கோ செல்லும் பயண கட்டணத்தில் 25 சதவிகித தள்ளுபடி (அதிகபட்சமாக 20 திர்ஹம்ஸ் வரை) வழங்கப்படும் என உபெர் ரைட்ஸ் (Uber rides) நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சலுகை பிப்ரவரி 8 ஆம் தேதிவரையில் நடைமுறையில் இருக்கும்.
உணவகங்களில் தள்ளுபடி
துபாயில் கேட்ஸ் ஹாஸ்பிடாலிட்டி (Gates Hospitality) நிறுவனத்திற்குச் சொந்தமான 3 உணவகங்களில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோசைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு 10 சதவிகிதமும், இரண்டு டோஸ்களைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு 20 சதவிகிதமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகையைப் பெற விரும்புபவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
அமீரகத்தில் உள்ள இலவச கொரோனா தடுப்பூசி மையங்களின் பட்டியலைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
அதேபோல, துபாயில் கூடுதலாக திறக்கப்பட்ட 120 இலவச கொரோனா தடுப்பூசி மையங்களின் பட்டியலைக் காண இங்கே கிளிக் செய்யவும்.