UAE Tamil Web

இந்தியாவிலிருந்து துபாய் வருவோருக்கு 5 ஸ்டார் ஹோட்டலில் அறை, 10 கிலோ கூடுதல் பேக்கேஜ் – எமிரேட்ஸ் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு..!

Emirates_

இந்தியாவில் இருந்து துபாய் வரும் பயணிகளைக் கவரும் விதத்தில் எமிரேட்ஸ் விமான நிறுவனம் சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளது.

- Advertisment -

இந்த ஆண்டு மார்ச் 15 – ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில் எமிரேட்ஸ் விமானம் மூலமாக துபாய் வர மார்ச் 8 முதல் 28 வரையிலான தேதிக்குள் எகனாமிக் கிளாஸ் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகள் ஒரு இரவு இலவசமாக JW மேரியாட் மார்க்குயிஸ் (JW Marriot Marquis) ஹோட்டலில் தங்கலாம் என எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேபோல, இதே தேதிகளில் துபாய் வர பிசினஸ் கிளாஸ் மற்றும் ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்பவர்கள் துபாய் வந்தடைந்த நாளில் இருந்து இரு இரவுகள் 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணம்

இந்தியாவில் இருந்து துபாய் வர,

  • எகனாமிக் கிளாஸ் – ரூ.17,982 (905 திர்ஹம்ஸ்)
  • பிசினஸ் கிளாஸ் – ரூ.68,996 (3,473 திர்ஹம்ஸ்)
  • ஃபர்ஸ்ட் கிளாஸ்ஸிற்கு ரூ.192,555 (9,700 திர்ஹம்ஸ்)

ஆகிய தள்ளுபடி விலையில் கட்டணங்களை நிர்ணயித்துள்ளது எமிரேட்ஸ்.

போலவே, துபாயில் இருந்து இந்தியா திரும்பும் பயணிகள் நிர்ணயிக்கப்பட்ட அளவைக்காட்டிலும் கூடுதலாக 10 கிலோ பேக்கேஜ் அலவன்சைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்றபடி முன்பதிவு செய்துகொள்ளவும் கொரோனாவை உள்ளடக்கிய பல வகையிலும் பயன்படக்கூடிய பயணக் காப்பீட்டையும் (multi-risk travel insurance with Covid-19 cover) எமிரேட்ஸ் இலவசமாக வழங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.