UAE Tamil Web

இனி “இவர்களுக்கும்” 10 வருடத்திற்கான கோல்டன் விசா வழங்கப்படும் – துபாய் ஆட்சியாளரின் அதிரடி அறிவிப்பு…!

Sheikh-Mohammed-bin-Rashid-Al-Maktoum_16d63e3b705_large

அமீரகத்தில் 10 வருடங்களுக்கு வழங்கப்படும் கோல்டன் விசா பெறத் தகுதியான துறைகளை அதிகரித்திருப்பதாக அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அறிவித்திருக்கிறார்.

- Advertisment -

PhD முடித்தவர்கள், அனைத்து டாக்டர்கள், கணினி, எலெக்ட்ரானிக்ஸ், புரோகிராமிங், எலெக்ட்ரிகல்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆக்டிவ் டெக்னாலஜி ஆகிய துறைகளைச் சேர்ந்த பொறியாளர்களுக்கு கோல்டன் விசா வழங்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் அதிக மதிப்பெண்களை (3.8 அல்லது அதற்கு மேல்) எடுத்த மாணவர்களுக்கு கோல்டன் விசா வழங்கப்படும் என துபாய் ஆட்சியாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

செயற்கை நுண்ணறிவியல் (Artificial Intelligence), பிக் டேட்டா (big data) வைரல் எபிடமாலாஜி (Viral epidemiology) மற்றும் பயோடெக்னாலஜி துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் கோல்டன் விசா வழங்க அனுமதியளிக்கப்பட்ட்டுள்ளதாக ஆட்சியாளர் தெரிவித்திருக்கிறார்.