UAE Tamil Web

கோலாகலமாக கொண்டாடப்பட்ட பெருநாள்.. நிரம்பி வழிந்த அமீரக மால்கள் – இரண்டு ஆண்டுகளுக்கு பின் கிடைத்த மகிழ்ச்சி!

ஈத் அல் அதா, “Feast of Sacrifice” என்று அழைக்கப்படுகிறது, இது சவூதி அரேபியாவில் வருடாந்திர ஹஜ்ஜின் இறுதி சடங்குகளுடன் இணைந்த ஒரு மரியாதைக்குரிய அனுசரிப்பு நிகழ்வாக நடைபெறுகிறது. இஸ்லாமியர்களின் இரண்டாவது பெரிய பண்டிகையும் இந்த பெருநாள் தான்.

இந்த சிறப்பான நாளன்று இஸ்லாமியர்கள் தாங்கள் வாங்கும் இறைச்சியில் மூன்றில் இரண்டு பங்கை ஏழைகளுடன் பகிர்ந்துகொள்ளும் வேளையில் தங்கள் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்ளும் ஒரு சந்தர்ப்பமாக அமைகின்றது.

அதிலும் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் கொஞ்சம் நிம்மதியோடு இந்த பெருநாளை இன்று கொண்டாடினர் என்பது தான் இன்னும் சிறப்பு. நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்கள் ஈத் அல் அதாவுக்காக பட்டாசுகள் உட்பட பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

4 நாள் நீண்ட ஈத் அல் அதா விடுமுறை என்பதால் துபாயில் உள்ள மால்களில் அமீரக குடியிருப்பாளர்களும் வெளிநாட்டு ஊழியர்களும் நிரம்பியிருந்தனர். மேலும் மக்கள் கூட்டம் அமீரக மால்களில் வழங்கப்படும் சலுகைகளுடன் கூடிய பொருட்களை ஆனந்தமாக வாங்கிச்சென்றனர்.

துபாய் ஃபெஸ்டிவல் சிட்டியில், ஈத் மூன்றாவது நாளில் மக்கள் வேடிக்கையான விளையாட்டுகளை விளையாடுவதையும், அமீரகத்தின் சிறந்த சமையல்களை ருசிப்பதையும், வானவேடிக்கைகளைப் பார்ப்பதையும் காண முடிந்தது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap