UAE Tamil Web

துபாய் RTA அறிவித்துள்ள போட்டி: 20 லட்சம் nol பாய்ண்டுகளைப் பெற வாய்ப்பு..!

RTA

உங்களுக்கு வாசிப்பின் மீது பிரியம் அதிகமா? அப்படியென்றால் உங்களுக்காகவே துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் புதிய போட்டி ஒன்றினை அறிவித்துள்ளது. இதன்மூலமாக நீங்கள் 20 லட்சம் nol பாய்ண்டுகளைப் பெறலாம். என்ன செய்ய வேண்டும்? நீங்கள் வாசித்தால் மட்டும் போதும்.

வாசிப்புக்கான இந்த மாதத்தினை சிறப்பிக்கும் பொருட்டு RTA ஆப் மூலமாக 600 க்கும் மேற்பட்ட இணைய ஆங்கில அராபிய புத்தகங்களை, ஆடியோ புத்தகங்களை, கட்டுரைகளை வாசிக்க மற்றும் வீடியோக்களைப் பார்க்கும் வகையில் அப்ளிகேஷன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது என RTA வின் பெருநிறுவன நிர்வாக ஒத்துழைப்பு சேவைத்துறையின் கீழ் இயங்கும் சந்தைப்படுத்துதல் மற்றும் பெருநிறுவன தகவல்தொடர்புப் பிரிவின் இயக்குனர் ரவ்தா அல் மெஹ்ரிஸ் (Rowdah Al Mehriz) தெரிவித்தார்.

“பயணிகள் RTA பதிப்பிக்கும் அல் மஸார் மற்றும் சலாமா இதழ்களைப் படிக்கலாம். மேலும் பல்வேறு இதழ்கள் மற்றும் தினசரி நாளிதழ்களைப் படிக்க ஏதுவாக ஆன்லைன் லிங்க்குகள் இந்த ஆப்பில் கொடுக்கப்படும். வாசிப்பாளர்களுக்கு 20 லட்சம் nol பாய்ண்டுகளை RTA அளிக்க இருக்கிறது” என மெஹ்ரிஸ் தெரிவித்தார்.

இந்த nol பாய்ண்டுகளைப் பயன்படுத்தி RTA மூலமாக இலவசமாக பயணிக்கலாம். பயணிகள் வைத்திருக்கும் nol கார்டுகளில் இந்த பாய்ண்டுகள் கிரெடிட் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாய்ண்டுகளைப் பயன்படுத்தி 12,000 அங்கீகாரம் பெற்ற கடைகளில் பொருட்களை வாங்கலாம். அதேபோல எதிஹாட் மியூசியம் மற்றும் பொது பூங்காக்களுக்கான டிக்கெட் பெறவும் இந்த பாய்ண்டுகளைப் பயன்படுத்தலாம்.

RTA ஆப் மற்றும் அதன் சமூக வலைத்தளப் பக்கங்கள் வாயிலாக அதிகமாக வாசிப்போருக்கு Serco வுடன் இணைந்து RTA பரிசுகளை வழங்க இருக்கிறது.

மிகவும் பின்தங்கிய குடும்பங்களில் இருந்து தனித்துவிடப்பட்ட சிறுவர்களுக்கான ஹெல்ப் மீ டூ ரீட் (Help Me To Read) என்னும் தலைப்பில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை RTA தன்னார்வலர்கள் குழு நடத்த இருக்கிறது.

“இந்த முயற்சிகள் மூலமாக RTA தனது சமூக பொறுப்பை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்லவும், கலாச்சாரம் மற்றும் கல்வி குறித்த விழிப்புணர்வை அனைத்து  சமூக மக்களுக்கும் ஏற்படுத்தவும் முடியும்” என மெஹ்ரிஸ் தெரிவித்தார்.

RTA
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap