UAE Tamil Web

துபாய்: பாம் ஜுமேராவில் நடைபெற இருந்த வான வேடிக்கை நிகழ்ச்சி திடீர் ரத்து.! காரணம் இது தான்.. மன்னிப்பு கேட்ட அமைப்பாளர்கள்..

dubai

49-வது தேசிய தினம் நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், துபாயில் வான வேடிக்கை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

- Advertisment -

துபாயின் பாம் ஜுமேராவிலுள்ள பாம் நீரூற்றில் நடைபெற இருந்த அமீரக தேசிய தின வானவேடிக்கை நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். அதே போல தி பாயிண்டில்(The Pointe) நடைபெறவிருந்த ஒரு நேரடி இசை நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களால் பாம் நீரூற்றில் இரவு 9 மணிக்கு தொடங்கவிருந்த நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளதாக அமைப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் தகவல் தெரிவித்துள்ள அமைப்பாளர்கள், ‘புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் காரணமாக, தி பாம் நீரூற்றில் நடைபெற இருந்த அனைத்து பட்டாசு காட்சி நிகழ்ச்சிகளும், மேலதிக அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படும்.

 

View this post on Instagram

 

A post shared by The Pointe (@thepointepalm)

மேலும், இசைக்குழுவின் நேரடி இசை நிகழ்வும் நடக்காது. ஆனால் பாம் நீரூற்று நிகழ்ச்சிகள் வழக்கம் போல் நடக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மிகுந்த ஆர்வமுடன் இருந்த உங்களது விரக்தியை நாங்கள் புரிந்து கொள்கிறோம். புதிய விதிமுறைகள் காரணமாகவே பட்டாசு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறோம். நீரூற்று நிகழ்ச்சியை நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறோம்’என தெரிவித்துள்ளனர்.