UAE Tamil Web

துபாய்: 4 நாட்களுக்கு இலவச பார்க்கிங், மெட்ரோ மற்றும் பேருந்து சேவை நேரங்களில் மாற்றம்.! RTA வெளியிட்ட புதிய அறிவிப்பு

metro

49-வது தேசிய தின கொண்டாட்டங்களை முன்னிட்டு மல்டி லெவல் பார்க்கிங் டெர்மினல்களைத் தவிர, துபாயில் உள்ள அனைத்து பப்ளிக் பார்க்கிங் பகுதிகளும் வரும் செவ்வாய் முதல் வெள்ளி வரை (நவம்பர் 1 முதல் 4 வரை) இலவசம் என்று சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம்(RTA) அறிவித்துள்ளது.

- Advertisment -

வர உள்ள பொது விடுமுறை காலத்தில் வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள், பொது பேருந்துகள், மெட்ரோ, டிராம், கடல் போக்குவரத்து மற்றும் சேவை வழங்குநர் மையங்கள் (வாகனங்களின் தொழில்நுட்ப சோதனை) ஆகியவற்றிற்கான திருத்தப்பட்ட நேரங்களையும் RTA அறிவித்துள்ளது.

பொது விடுமுறை காலத்தில் திருத்தியமைக்கப்பட்ட நேர அட்டவணைப்படி, துபாய் மெட்ரோவின் ரெட் லைன் அதிகாலை 5 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 1 மணி வரை இயங்கும். துபாய் மெட்ரோவின் கிரீன் லைன் காலை 5.30 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 1.00 மணி வரை இயங்கும். துபாய் டிராம் காலை 6 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 1 மணி வரை இயங்கும்.

பேருந்து சேவை நேரங்கள்..

ரஷீதியா, மால் ஆஃப் தி எமிரேட்ஸ், இப்னு பதூதா, துபாய் மால் / புர்ஜ் கலீஃபா, அபு ஹெயில், மற்றும் எதிசலாட் ஆகிய இடங்களில் மெட்ரோ இணைப்பு பேருந்து சேவை அதிகாலை 5 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 1:10 மணி வரை இருக்கும்.

பொது பேருந்துகள் (துபாய் பஸ்) நேரம் செவ்வாய் முதல் புதன்கிழமை வரை மட்டுமே இருக்கும். முதன்மை நிலையங்கள் (கோல்டுக் சூக் நிலையத்துடன் சேர்ந்து) அதிகாலை 4.25 மணி முதல் அதிகாலை 12:29 வரை செயல்படும். அல் குபைபா நிலையம் அதிகாலை 4.14 முதல் 12:58 வரை செயல்படும்.

இன்டர்சிட்டி பஸ் மற்றும் கமர்ஷியல் கோச்கள் யூனியன் ஸ்கொயரிலிருந்து அதிகாலை 4.25 மணி முதல் இரவு 11 மணி வரையும், எதிசலாட் மெட்ரோ நிலையத்திலிருந்து அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையும், அபு ஹெயில் மெட்ரோ நிலையத்திலிருந்து காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையம் இயக்கப்படும்.

வெளி நிலையங்களின் நேரம் பின்வருமாறு: ஷார்ஜாவின் ஜுபைலுக்கு காலை 5.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை, ஹத்தாவிற்கு காலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை, அஜ்மானிற்கு காலை 5.15 மணி முதல் இரவு 11 மணி வரை சேவைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடல் போக்குவரத்து நேரம்:

மெரினா நிலையங்களில் (மெரினா மால், மெரினா வாக், மெரினா டெரஸ், மெரினா ப்ரெமனேட்) மதியம் 12 மணி முதல், நள்ளிரவு 12 மணி வரை வாட்டர் பஸ் இயக்கப்படும்.அதே போல பாரம்பரியமிக்க ஆப்ரா மற்றும் ஃபெர்ரி ஆகியவை விடுமுறை நாட்களில் திருத்தப்பட்ட நேரங்களுடன் செயல்படும்.

RTA சென்டர்கள்..

சேவை வழங்குநர் மையங்கள்(Service Provider Centres) செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை மூடப்பட்டு சனிக்கிழமை மீண்டும் வணிகத்தை தொடங்கும். வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள்(Customer Happiness Centres) செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை மூடப்பட்டு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் வணிகத்தைத் தொடங்கும். உம் அல் ரமூல், தேரா, அல் பார்ஷா மற்றும் RTA தலைமை அலுவலகத்தில் உள்ள ஸ்மார்ட் வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள்(Smart Customer Happiness Centres) வழக்கம் போல் 24/7 மணி நேரம் செயல்படும்.