UAE Tamil Web

துபாயில் பல பள்ளிகளைத் திறந்த இந்தியாவைச் சேர்ந்த மரியம்மா வர்கி காலமானார் : துபாய் ஆட்சியாளர் அஞ்சலி..!

His-Highness-Sheikh-Mohammed-Bin-Rashid-Al-Maktoum--Vice-President-and-Prime-Minister-of-the-UAE-and-Ruler-of-Dubai_

கேரளாவைச் சேர்ந்த மரியம்மா வர்கி துபாயின் முதல் ஜெம்ஸ் பள்ளியினை நிறுவியவர். 89 வயதான இவர் புதன்கிழமை அன்று காலமானதாக அவரது மகன் சன்னி வர்கி தெரிவித்திருந்தார். மேடம் வர்கி எனப் பலராலும் அறியப்பட்ட இவரது மறைவிற்கு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ட்விட்டர் மூலமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

துபாய் ஆட்சியாளர் தனது ட்விட்டர் பக்கத்தில்,” 1959 ஆம் ஆண்டு மரியாம்மாவும் அவரது கணவரும் துபாய்க்கு வந்தார்கள். அமீரகத்திற்கு உள்ளேயும் அமீரகத்திற்கு வெளியேயும் ஆயிரம் ஆயிரம் மாணவர்கள் படிக்க பல பள்ளிகளைத் திறக்கும் அளவிற்கு அவருக்கு கல்வியின் மீது தீரா காதல் இருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சியாளரின் இந்தப் பதிவிற்கு பலரும் லைக்குகள் மற்றும் ஷேர் செய்து வைரலாக்கியதோடு மட்டுமல்லாமல், மரியம்மா வர்கியின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

மரியம்மா வர்கி அவர்களின் இறுதி சடங்குகள் அடுத்த திங்கட்கிழமை ஜெபல் அலி மார்த்தோமா தேவாலயத்தில் நடைபெறும் என்றும் செவ்வாய்க்கிழமை மெய்நிகர் இரங்கல் கூட்டம் நடைபெறும் என்றும் அதற்கான விவரங்கள் பின்னர் பகிரப்படும் என சன்னி வர்கி தெரிவித்துள்ளார்.

His-Highness-Sheikh-Mohammed-Bin-Rashid-Al-Maktoum--Vice-President-and-Prime-Minister-of-the-UAE-and-Ruler-of-Dubai_
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap