UAE Tamil Web

துபாய்: ஷேக் சயீத் சாலையில் விபத்து: போக்குவரத்து பாதிப்பு..!

Dubai Traffic

துபாய்: மால் ஆஃப் தி எமிரேட்ஸ்க்கு அடுத்தாற்போல் ஷேக் சயீத் சாலையில் இன்றுகாலை விபத்து நிகழ்ந்திருப்பதால் அப்பகுதியில் வாகனநெரிசல் ஏற்பட்டிருப்பதாக துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.

- Advertisment -

இதுகுறித்து டிவிட்டரில் துபாய் காவல்துறை வெளியிட்ட செய்தியில்,”மால் ஆஃப் தி எமிரேட்ஸ்க்கு அடுத்தாற்போல் ஷேக் சயீத் சாலையில் துபாய் சர்வதேச நிதி மையத்திற்குச் (DIFC) செல்லும் வழியில் விபத்து நிகழ்ந்திருக்கிறது. இதன்காரணமாக போக்குவரத்து தாமதமாகியிருக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாகனவோட்டிகள் கூடுதல் கவனத்துடனும், போதிய இடைவெளியுடனும் வாகனத்தை இயக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.