UAE Tamil Web

நடுரோட்டில் நின்ற வாகனத்தால் ஸ்தம்பித்த போக்குவரத்து – மாற்று வழிகளில் செல்லுமாறு துபாய் காவல்துறை அறிவிப்பு..!

traffic

ஜெபல் அலி செல்லும் அல் கைல் சாலையில் வாகனம் ஒன்று பழுதடைந்து நிற்பதால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.

- Advertisment -

இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் துபாய் காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில், சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்திருக்கிறது. ஆகவே, வாகனவோட்டிகள் மாற்று வழிகளில் செல்லவும் எனக் குறிப்பிட்டுள்ளது.

துபாய் காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில்,” ஜெபல் அலி செல்லும் அல் கைல் சாலையில் அல் மெய்தான் மேம்பாலத்திற்கு முன்பாக வாகனம் பழுதடைந்து நிற்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.

வாகனவோட்டிகள் கவனமாக வாகனங்களை இயக்குமாறும் அதிவேகத்தைத் தவிர்க்குமாறும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.