UAE Tamil Web

அமீரகத்திலேயே முதல் முறையாக துபாயில் குழந்தைகளுக்காகவே திறக்கப்பட்ட உறுப்பு மாற்று மையம்..

kids

அமீரகத்திலேயே முதல் முறையாக குழந்தைகளுக்கென்றே பிரத்யேகமான முதல் உறுப்பு மாற்று மையத்தை துபாயிலுள்ள அல் ஜலீலா குழந்தைகள் சிறப்பு மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.

- Advertisment -

அல் ஜலீலா குழந்தைகள் மருத்துவமனை அதன் நான்காம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், துபாயில் குழந்தைகளுக்கான முதல் உறுப்பு மாற்று மையத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. உறுப்பு மாற்று திட்டங்களை முன்னெடுப்பதற்கான தேசிய முயற்சிகளுக்கு ஏற்ப, இந்த மையம் உறுப்பு செயலிழப்பால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முழு அளவிலான கவனிப்பை வழங்கும்

இந்த மையத்தில் சிறுநீரகம், கல்லீரல், இதயம் மற்றும் எலும்பு மஜ்ஜை நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உறுப்பு மாற்று சேவைகள் வழங்கப்படும்.முதற்கட்டமாக, இந்த மையம் சிறுநீரக மாற்று திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும், மற்ற சிகிச்சைகள் படிப்படியாக பின்னர் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல் ஜலீலா குழந்தைகள் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் அப்துல்லா அல் கயாத் பேசுகையில், 2016-ம் ஆண்டில் மனித உறுப்புகள் மற்றும் திசுக்களை மாற்றம் செய்ய அனுமதிக்கும் அமீரக ஃபெடரல் சட்டம் இயற்றப்பட்டதிலிருந்து, சம்பந்தப்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு உயர்தர மாற்று உறுப்பு மாற்று சேவைகளை அணுகுவதற்கு உதவுவதில் பெரும் பங்காற்றியுள்ளனர். தற்போது நாங்கள் துவங்கியுள்ள இந்த புதிய மையமானது பிராந்திய மற்றும் உலகளாவிய ரீதியில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் அமீரகத்தை முன்னணியில் வைப்பதற்கு முக்கிய பங்களிக்கும் என்றார்.

அல் ஜலீலா குழந்தைகள் உறுப்பு மாற்று மையமானது கதிர்வீச்சு வெளிப்பாட்டை குறைக்கவும், நோயாளிகளின் நிலைமைகளை நன்கு புரிந்து கொள்ளவதற்காக, இமேஜிங் நடைமுறைகள்(imaging procedures) போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும்.

துபாயில் குழந்தைகள் உறுப்பு மாற்று நடைமுறையை முன்னெடுப்பதில் அல் ஜலீலா சில்ட்ரன்ஸ் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மருத்துவமனை, முகமது பின் ரஷீத் மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்துடன் (MBRU) இணைந்து துபாயில் முதல் குழந்தை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. ஒற்றை சிறுநீரகத்துடன் பிறந்த 9 வயது சிறுமிக்கு ஒரு புதிய வாழ்க்கையை அளித்தது. இன்றுவரை இந்த மருத்துவமனை மொத்தம் 4 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.