UAE Tamil Web

துபாய்: போலீஸ் தலைமையகம் முன் தீப்பிடித்து எரிந்த வாகனம்..!

dubai

துபாய் காவல்துறை தலைமையகம் முன் இன்று பிற்பகல் வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

- Advertisment -

இன்று பிற்பகல் 2.50 மணியளவில் அல் கியாடா சுரங்கத்திற்கு அருகே, அல் முல்லா பிளாசாவை(Al Mulla Plaza) நோக்கி செல்லும் வழியில் இந்த வாகன தீ விபத்து ஏற்பட்டதாக துபாய் போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

எனவே அவ்வழியே செல்ல திட்டமிட்டுள்ள ஓட்டுநர்கள் மாற்று சாலைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் துபாய் போலீஸார் சமூக ஊடகங்கள் வழியே கேட்டு கொண்டனர். தீ விபத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரி செய்ய போலீஸ் ரோந்து வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அதற்கான பணிகளை மேற்கொண்டனர்.