UAE Tamil Web

துபாய்: ஷேக் சயீத் சாலையில் திடீரென தீப்பிடித்த வாகனம்..!

Sheikh Zayed Road

துபாயின் பிரபல சாலையான ஷேக் சயீத் சாலையில் இன்று காலை வாகனம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக துபாய் காவல்துறை தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

- Advertisment -

ஜெபல் அலியிலிருந்து துபாய் செல்லும் வழியில், துபாய் வாட்டர் கேனல் மேம்பாலம் அருகே இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.

இந்த விபத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வாகனவோட்டிகள் கவனமாக அப்பகுதியை கடந்து செல்லுமாறு துபாய் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.