UAE Tamil Web

துபாய்: 2021 ஆம் ஆண்டில் மிக அதிக தொகைக்கு விற்கப்பட்ட வில்லா இதுதான் – விலை எவ்வளவு தெரியுமா?

Villa

துபாய் பாம் ஜுமேய்ராவில் உள்ள வில்லா ஒன்று 111.25 மில்லியன் திர்ஹம்ஸ்க்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் 2021 ஆம் ஆண்டு துபாயில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட வில்லா என்ற பெருமையை இந்த வில்லா தட்டிச் சென்றிருக்கிறது.

ஒன்100பாம் (One100Palm) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த வில்லாவை சுவிட்சர்லாந்தை பூர்வீகமாகக் கொண்ட மொனாக்கோவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று வாங்கியிருக்கிறது. இருப்பினும் வில்லாவை வாங்கியவர் பற்றிய குறிப்புகள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

அப்படியென்ன இருக்கிறது இந்த வில்லாவில்?

14,000 சதுர மீட்டரில் 3 தளங்களுடன் அழகாக எழுந்து நிற்கும் இந்த வில்லாவில் 5 விஐபி பெட்ரூம்கள் உள்ளன. மாஸ்டர் பெட்ரூம் 1,300 சதுரமீட்டர் பரப்பளவு கொண்டதாகும். கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த வில்லா விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

லூயிஸ் வூட்டன் & ஹெர்மிஸ் ஆகியோரால் வடிவமைக்கப்பட்ட பெண்ட்லி & மினோட்டி பர்னிச்சர்கள் காண்போரை நிச்சயம் மயங்கவைக்கும். மூன்று உள்/வெளியரங்க சினிமா லவுஞ்கள், ரூஃப் டாப்பில் சினிமா லவுஞ்சுடன் கூடிய கண்ணாடியிலான ஜக்கூசியில் பாப் -அப் டிவியும் பொருத்தப்பட்டுள்ளது.

ரிச்சர்ட் ஆர்லின்ஸ்கி (Richard Orlinsky) மற்றும் ஈரோ ஆர்னியோ (Eero Arnio) ஆகியோரால் வடிவமைக்கப்பட்ட அழகிய சிற்பங்கள் மற்றும் ஃபிதியா ஃபாலாசெட்டி & ஸ்கிராப்ஸ்கல்டெர்ஸ் USA (Fidia Falaschetti & Scrapsculteres USA) ஆகியோர் வரைந்த ஓவியங்களும் இந்த வில்லாவில் இடம்பெற்றுள்ளன.

லக்ஷாபிடட் (Luxhabitat)-ன் படி 2020 ஆம் ஆண்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட வில்லாவின் விலை 75 மில்லியனாகும்.

Villa
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap