பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரத்திலிருந்து நேற்று இரவு எமிரேட்ஸ் ஸ்கை கார்கோ விமானம் மூலமாக ஃபைசர் கொரோனா தடுப்பு மருந்து துபாய் வந்தடைந்தது.
இதனையடுத்து தேசிய அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உச்ச சபை இன்று முதல் இலவச தடுப்பூசி வழங்கும் திட்டத்தை துவங்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Dubai‘s Supreme Committee of Crisis and Disaster Management: Extensive vaccination campaign against Covid-19 kicks off in Dubai on Wednesday. Vaccination will use Pfizer-BioNTech’s vaccine and is free of charge.
— Dubai Media Office (@DXBMediaOffice) December 22, 2020
அவசரநிலை கருதி ஸ்கை பார்மா நிறுவனத்துடன் இணைந்து ஃபைசர் கொரோனா தடுப்பு மருந்தின் முதல் தொகுதியை துபாய்க்குக் கொண்டுவந்திருக்கிறது எமிரேட்ஸ் விமான நிறுவனம்.
அவசரநிலையைக் கருத்தில்கொண்டு ஃபைசர்-பயோஎன்டெக் (Pfizer-BioNTech) கொரோனா வைரஸ் தடுப்பூசியை செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் பதிவு செய்வதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் அறிவித்தது.
#Dubai receives first batch of Pfizer-BioNTech’s COVID-19 vaccines transported from Brussles to Dubai on @Emirates SkyCargo flight. The shipment was offloaded and cleared on priority basis on arrival at Emirates’ dedicated SkyPharma facility. pic.twitter.com/JDhoUzvfgA
— Dubai Media Office (@DXBMediaOffice) December 22, 2020
இதனையடுத்து மனித உயிரைக் காக்கும் பொருட்டு ஷரியா விதிமுறைகளுக்குட்பட்டு ஃபைசர்-பயோஎன்டெக் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு ஃபத்வா கவுன்சில் அனுமதியளித்திருக்கிறது.
மேலும், உலகமெங்கிலும் உள்ள சமூக அமைப்புகள் அரசாங்கத்துடன் இணைந்து இந்த கொரோனா தடுப்பு மருந்தினை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனமாக பின்பற்றவேண்டும் எனவும் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
بناء على الطلب الذي تقدمت به شركة “#فايزر” .. وزارة الصحة تعلن عن التسجيل الطارئ للقاح “#كوفيد19 ” الذي أنتجته “فايزر- بيونتيك”#وام pic.twitter.com/SnPORHwO3G
— وكالة أنباء الإمارات (@wamnews) December 22, 2020