துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச் என்னும் திட்டம் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் (Sheikh Hamdan bin Mohammed bin Rashid Al Maktoum) அவர்களால் தொடங்கப்பட்டு வருடாவருடம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வருடத்திற்கான துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச் கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி துவங்கியது. நவம்பர் 28 ஆம் தேதிவரையில் நீடிக்கும் இந்த நிகழ்வில் பல்வேறு காணொளி மற்றும் உடற்பயிற்சி செயல்பாடுகள் நடைபெறுகின்றன.
இதன் ஒருபகுதியாக துபாயின் பட்டத்து இளவரசர் சைக்கிளில் பயணம் மேற்கொண்டார். அவருடன் டிபி வேர்ல்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான சுல்தான் அகமது பின் சுலையேம் (Sultan Ahmed Bin Sulayem) ஆகியோரும் கலந்துகொண்டார்.
கடுமையான கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடைபெறும் இந்த நிகழ்வில் தனியார்துறைகளும் ஆர்வத்துடன் பங்களிப்பு செய்துவருகின்றன.
While taking part in a bike ride yesterday with leaders of major global companies operating in Dubai, as part of the @DXBFitChallenge. We have a strong partnership with the private sector that is in line with our goals for progress. pic.twitter.com/NhBmhzzb4T
— Hamdan bin Mohammed (@HamdanMohammed) November 16, 2020
இதுகுறித்து இளவரசர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில்,”துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச் நிகழ்வில் கலந்துகொள்ளும் விதமாக, துபாயில் இயங்கிவரும் உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுடன் சைக்கிளில் பயணம் மேற்கொண்டேன். தனியார் துறைகளுடன் நாங்கள் இணக்கமாக இருக்கிறோம். இது எங்களுடைய இலக்கை நோக்கி மேலும் எங்களை நகர்த்துகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.