அன்னையர் தினம் வரவிருக்கும் வேளையில் அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், தனது அம்மாவுடன் தான் கொண்ட பாசத்தினை வெளிப்படுத்தும் விதமாக வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்தியில்,” தாய்மார்களே உலகில் உங்களுக்கு நிகரானவர் யார்? நீங்களே வாழ்கையின் ஆதாரம். அன்பு மற்றும் இரக்கத்தால் இந்த பிரபஞ்சத்தை நிறைக்கும் உங்களின் பெருமைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
إلى كل الأمهات .. من مثلكن .. من يشبهكن.. أنتن مصدر الحياة .. أنتن الحياة .. تتقاصر كلماتنا عن وصف حجم المحبة والرحمة الذي وضعتموه في هذا الكون ..
حفظكن الله ..#يوم_الأم pic.twitter.com/073t0tMw6n— HH Sheikh Mohammed (@HHShkMohd) March 20, 2021
தனது தாய் ஷேக்கா லத்திஃபா பின்ட் ஹம்தான் பின் சயீத் அல் நஹ்யான் குறித்து வீடியோவில் குறிப்பிட்ட துபாய் ஆட்சியாளர்,” நான் என் அம்மாவுடன் மிகவும் நெருக்கமானவன். அவர் செலுத்திய அன்பைப்போல நான் வேறெங்கும் அனுபவித்ததில்லை. அவரது வார்த்தைகளை நான் நினைத்துப் பார்க்கிறேன். அம்மாவை நாடி பலர் வருவார்கள். தன்னம்பிக்கையும் அன்பும் மிகுந்த ஆளுமை அவர். அவரையறிந்த அனைவருக்கும் அவரைப் பிடிக்கும். அவரைப்போல இவ்வுலகில் யாருமில்லை” என்றார்.