UAE Tamil Web

நேற்று புர்ஜ் கலீஃபாவில் திரையிடப்பட்ட வீடியோவை பார்த்தீர்களா?

Oman's 50th National Day

நேற்று உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலீஃபா கட்டிடத்தின் மீது வண்ண விளக்குகளால் ஒளிவெள்ளம் பாய்ச்சப்பட்டது. ஓமானின் 50 வது தேசிய தினத்தை முன்னிட்டுத்தான் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

- Advertisment -

இதேபோல அபுதாபியின் முக்கிய இடங்களிலும் ஓமான் சுல்தானுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விதமாக கண்கவர் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.

அமீரகத்தில் நிகழ்ந்த இந்த கொண்டாட்டத்திற்கான ஸ்லோகமாக “ஓமான் எங்களுக்குள் இருந்து வந்தது. நாங்கள் ஒமானுக்குள் அங்கமாக இருக்கிறோம்” என்ற வாக்கியம் இடம்பெற்றிருந்தது.

முன்னதாக அமீரக தலைவர்கள் ஓமானின் 50 வது தேசிய தினத்தை முன்னிட்டு ஓமான் சுல்தானுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.