அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் புதிய வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில்,”சிரமங்கள் வந்துகொண்டேதான் இருக்கும். அதிலிருந்து தப்பிக்க ஒரே வழி முன்னேறிச்செல்வதுதான்” என ஆட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.
“அமீரகத்தின் மக்களிடமும் உலகத்திடமும் நாங்கள் 40 வருடத்திற்கு முன்பு வாக்குறுதியைக் கொடுத்தோம். அமீரகம் எப்போதும் அதன் இயங்குதலை நிறுத்தாது என்பதுதான் அது. உலகில் எப்போதும் பிரச்சினைகள் வந்துகொண்டேதான் இருக்கும். ஆனால் நாம் தொடர்ந்து முன்னேறிச்செல்ல வேண்டும். எங்களது நாட்டிற்கும் எங்களது மக்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என ஆட்சியாளர் தெரிவித்துள்ளார்.
فيديو صاحب السمو الشيخ محمد بن راشد آل مكتوم على حسابه في انستغرام، يشارك فيه سموه جانباً من خبراته الحياتية والقيادية..#ومضات_قيادية pic.twitter.com/fQ5xUdLVUM
— Dubai Media Office (@DXBMediaOffice) March 12, 2021
நேர மேலாண்மையைக் குறித்துப் பேசிய ஆட்சியாளர்,”காலத்தை நாம் வீணடிக்கக்கூடாது. ஆறு எப்போதும் பின்னோக்கிப் பாயாது. அதைப்போல நம்மால் கடந்துபோன நேரத்தையும் மீளுருவாக்கம் செய்யமுடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
வீடியோவில், கடந்த 50 ஆண்டுகளில் அரபு மக்களின் முயற்சிகளால் அமீரகம் எத்துனை துரிதமாக வளர்ந்திருப்பது என்பதையும், கால வெள்ளத்தில் துபாய் எவ்வாறு நீடித்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்பதனையும் ஆட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.