அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
தலைமைத்துவ பார்வை எனப் பொருள்படும் #leadershipglimpse என்ற ஹேஷ்டாக்குடன் ஆட்சியாளர் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
صاحب السمو الشيخ محمد بن راشد آل مكتوم يطلق وسم #ومضات_قيادية على حسابه في انستاغرام، يشارك فيه سموه جانباً من خبراته الحياتية والعملية وتجاربه ورؤيته القيادية… وقد نشر أول فيديو حول كيف بدأت أحلام سموه منذ الصغر لتحقيق الريادة للإمارات والسعادة لشعبها. pic.twitter.com/dpNHTQ1Ql9
— Dubai Media Office (@DXBMediaOffice) January 22, 2021
வீடியோவின் பின்னணியில் ஆட்சியாளரின் குரல் ஒலிக்கிறது. அதில், ” சிறுவயதில் நான் அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் சென்றிருக்கிறேன். ஆனால் அப்போது அமீரகத்தின் சாலைகள் மணலால் சூழப்பட்டிருந்தன. அப்போது நான் நவீனமான சாலைகள், அமைச்சகங்கள், சுரங்கப்பாதைகள், பல்கலைகழகங்கள் ஆகியவை நமக்கும் வேண்டும் எனக் கனவு கண்டேன். நமக்கென ஒரு யூனியன், நமக்கென ஒரு கொடி ஏன் இல்லை என என்னை நானே கேட்டுக்கொண்டேன். நான் கனவு கண்டேன். எனது கனவுகள் பெரிதாய் இருந்தன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் ஆட்சியாளரின் சிறுவயது புகைப்படம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.