UAE Tamil Web

உலகின் மிகப்பெரிய இயற்கை மலர் தோட்டம்.! 3 முறை கின்னஸ் சாதனை படைத்த “துபாய் மிராக்கிள் கார்டன்” மீண்டும் திறப்பு.! பார்வையிட கட்டணம் எவ்வளவு.?

garden1

உலகின் மிகப்பெரிய இயற்கை மலர் தோட்டமான துபாய் மிராக்கிள் கார்டன் வரும் ஞாயிற்று கிழமை (நவம்பர் 1) மீண்டும் திறக்கப்பட உள்ளது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் பாதுகாப்பான சூழலில் பார்வையாளர்கள் வேடிக்கை நிறைந்த அனுபவத்தை தொடர்ந்து அனுபவிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த, கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளின் கீழ் மிராக்கிள் கார்டன் மீண்டும் திறக்கப்பட உள்ளது.

- Advertisment -

நடப்பாண்டு துவங்க உள்ள 9-வது சீசனில் 120-க்கும் மேற்பட்ட வகைகளில் 150 மில்லியனுக்கும் அதிகமான பூக்கள் கண்களுக்கு விருந்தளிக்க உள்ளன. இவற்றில் சில வளைகுடா பிராந்தியத்தில் ஒருபோதும் பயிரிடப்படாதவை. தவிர ஏராளமான வெளிப்புற செயல்பாடுகள் (outdoor activities) மற்றும் மின்னும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சிற்பங்கள் மூலம் விருந்தினர்களுக்கான இரவு அனுபவத்தை இந்த பூங்கா மேம்படுத்தியுள்ளது.

garden2

மேலும் ஏரியல் ஃப்ளோட்டிங் லேடி(aerial floating lady) எனப்படும் பூக்களால் மிதக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்ட பெண்ணின் உருவம் அனைவரையும் நிச்சயம் கவரும். அதே போல புதுப்பிக்கப்பட்ட ஆம்பிதியேட்டர் அரங்கு ஒரு அற்புதமான அரண்மனையை கொண்டுள்ளது. பார்வையாளர்கள் நேரடி பொழுதுபோக்கு மற்றும் பிற நிகழ்ச்சிகளை அனுபவிக்கக்கூடிய ஒரு ஆய்வகமாக இது உள்ளது.

நடைபயிற்சி பாதை;

மிராக்கிள் கார்டனில் அமைக்கப்பட்டுள்ள 400 மீட்டர் நடைபயிற்சி பாதை, மலர் கலைத்திறன் மத்தியில் நிதானமாக நடந்து செல்ல பார்வையாளர்களுக்கு வாய்ப்பளிக்கிறது. இந்த நடை பாதை ஆடை மற்றும் மலர் அணிவகுப்புகள், தெரு கலைஞர்கள், ஜூம்பா அமர்வுகள் மற்றும் பிற உடல் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் உள்ளிட்ட தினசரி உற்சாக நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்தப்படும்.

garden3

கார்டனின் பிரதான நுழைவாயிலில் மிகவும் பிரபல ற்றும் முக்கிய கார்ட்டூன் கதாபாத்திரங்களால் பறையாளர்களை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கார்டனின் ஆடம்பரமான காட்சிகளாக எமிரேட்ஸ் ஏ 380 டிஸ்ப்ளே(mirates A380 display) மற்றும் தோட்டத்தின் டிஸ்னி அவென்யூவுக்குள் மிக்கி மவுஸின் 18 மீட்டர் மலர் அமைப்பு ஆகியவை இருக்கும். பார்வையாளர்களுக்காக கார்டன் டயனிங் அனுபவம், ஒளிரும் நைட்ஸ்கேப் மற்றும் தனித்துவமான கரீபியன் மற்றும் ஏசியன் ஹம்மாக்ஸ்(Asian hammocks) ஆகியவற்றைக் கொண்டிருக்கும் மலர் கோட்டை அமைக்கப்பட்டிருக்கும்.

துபாய்லேண்ட்டின் மையப்பகுதியில் 72,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்கா பார்வையாளர்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் உணவு மற்றும் பானங்கள் விற்பனைக்கு ஒரு பிரத்யேக இடத்தை வழங்கும்.

garden4

கொரோனாவிற்கு மத்தியில் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும், நெறிமுறைகளும் மிராக்கிள் கார்டனில் செயல்படுத்தப்பட உள்ளது. கார்டனில் நுழையும் பார்வையாளர்களின் உடல் வெப்பநிலை கண்காணிக்கப்படும். கார்டனின் அனைத்து பகுதிகளிலும் ஹேண்ட் சானிடைசர்கள் கிடைக்கும். பூங்கா முழுவதும் சமூக இடைவெளி கண்டிப்பாக செயல்படுத்தப்படும். உடல்நலம், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள பூங்காவின் குழுவுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

3 முறை கின்னஸ் சாதனை..

துபாய் மிராக்கிள் கார்டன் இதுவரை 3 முறை கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.‘மிக்கி மவுஸின் வடிவத்தை உருவாக்கும் மிக உயரமான டோபியரி அமைப்பு என்பதற்காக 2018-ம் ஆண்டிலும், உலகின் மிகப்பெரிய மலர் அமைப்பு A380 வடிவத்தை உருவாக்கி சாதனை படைத்ததற்காக 2016-ம் ஆண்டிலும், மிகப்பெரிய செங்குத்து தோட்டத்தை அமைத்ததற்காக 2013-ம் ஆண்டிலும் கின்னஸ் சாதனை படைத்தது துபாய் மிராக்கிள் கார்டன்.

garden5

திறந்திருக்கும் நேரம்.?

துபாய் மிராக்கிள் கார்டன் வார நாட்களில் தினமும் காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையும், வார இறுதி நாட்களில் (வெள்ளி மற்றும் சனிக்கிழமை) மற்றும் பொது விடுமுறை நாட்களிலும் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும்.

கட்டணம் எவ்வளவு.?

12 வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு 40 திர்ஹம்ஸ், பெரியவர்களுக்கு (12 வயதுக்கு மேற்பட்டவர்கள்) 55 திர்ஹம்ஸ் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படும். மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம்.