துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாக கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அல் குத்ரா பகுதியில் சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்தவேளையில் திடீரென மிகப்பெரிய நெருப்புக்கோழி ஒன்று அவரைக் கடந்து சென்றிருக்கிறது.
மர்மூம் பாலைவனத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் வளரும் இந்த பிரம்மாண்ட நெருப்புக்கோழி சராசரியாக 2 மீட்டர் வரை வளரும் தன்மை கொண்டது. இளவரசரின் முன்னால் சாலையைக் கடந்த நெருப்புக்கோழியின் புகைப்படத்தை இளவரசர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது தற்போது வைரலாகியிருக்கிறது.