UAE Tamil Web

துபாய்: 3 நாட்கள் நடைபெறும் தள்ளுபடித் திருவிழா – வாங்கும் பொருட்களுக்கு 90% வரையில் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிப்பு..!

shopping

3 நாள் சூப்பர் சேல்  (3DSS) துபாயில் வரும் மே 27 – 29 ஆம் தேதிவரையில் நடைபெற இருக்கிறது. லைஃப்ஸ்டைல், அழகுசாதனப் பொருட்கள், ஃபேஷன் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் உட்பட பல பொருட்களுக்கு 90 சதவிதம் வரையிலும் தள்ளுபடி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3DSS ன் மூலமாக உலகின் முக்கிய பிராண்டுகள் துபாயில் சங்கமிக்க இருக்கின்றன. இந்தத் தள்ளுபடித் திருவிழாவில் 1500 கடைகளில் இருந்து அதிரடி குறைக்கப்பட்ட விலைகளில் நீங்கள் உங்களுக்கான பொருட்களை வாங்கலாம்.

துபாயில் உள்ள மால்கள், கடைகள் மற்றும் விற்பனை நிலையங்கள் மூலமாக கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தள்ளுபடி திருவிழா நடைபெறும் என இந்நிகழ்வினை ஒருங்கிணைக்கும் துபாய் திருவிழா மற்றும் சில்லரை வர்த்தக ஸ்தாபனம் (DFRE) தெரிவித்துள்ளது.

DFRE வின் தலைமை நிர்வாக அதிகாரி அகமது அல் காஜா இதுகுறித்துப் பேசுகையில்,” கோடைக்காலம் துவங்குவதை தள்ளுபடி மற்றும் சிறந்த ஆஃபர்கள் மூலமாக மக்கள் கொண்டாடும் வகையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு இருமுறை நடைபெறும் இந்தத் தள்ளுபடி திருவிழா மகிழ்ச்சியையும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கான செயல்பாடுகளையும் உள்ளடக்கியதாகும். இந்த தள்ளுபடித் திருவிழாவில் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இதன்மூலமாக குடியிருப்பாளர்கள், சுற்றுலாவாசிகள் பல்வேறு பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்குவதுடன் பரிசுப் பொருட்களையும் பெறலாம்” என்றார்.