அமீரகத்தின் 48வது தேசிய தினத்தை போற்றும் வகையில் புர்ஜ் கலீஃபாவில் வண்ண விளக்கு காட்சி..!

Dubai's Burj Khalifa lights up to mark 48th UAE National Day

ஐக்கிய அரபு அமீரகத்தின் 48வது தேசிய தினத்தை முன்னிட்டு, துபாய் புர்ஜ் கலீஃபா அமீரக கொடியின் வண்ணங்களை மிளிரும் வண்ண விளக்குகளால் ஒளியேற்றி அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது.

இந்த காட்சி புர்ஜ் கலீஃபாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டது.

அதில் “எங்கள் இதயங்களில் பெருமையுடனும், எங்கள் முகத்தில் புன்னகையுடனும், ஐக்கிய அரபு அமீரகத்தின் மறக்கமுடியாத இதுவரையிலான பயணத்தையும், வரும் காலங்களில் வரவிருக்கும் பயணத்தையும் மகிழ்விப்போம். #UAENationalDay வாழ்த்துக்கள்” என்ற வசனம் ட்விட்டில் இடம் பெற்றிருந்தது.

இன்றைய நாள் அமீரகத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக துபாய் வாழ் தமிழர்கள் பெருமையுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Loading...