புர்ஜ் கலீஃபா. உலகின் மிகப்பெரிய கட்டிடத்தின் பெருமைகளைப் பற்றி நிறையவே சொல்லலாம். 828 மீட்டர் உயரத்தில் வானுயர்ந்து நிற்கும் இந்த கட்டிடத்தின் சிறப்புகளில் தற்போது மேலும் ஒன்று இணைந்திருக்கிறது.
பிக் 7 டிராவல் (Big 7 Travel) என்னும் நிறுவனம் உலகின் அழகிய கட்டிடங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் புர்ஜ் கலீஃபாவிற்கு 50 வது இடம் பிடித்துள்ளது. அமீரகத்திலிருந்து இப்பட்டியலில் இடம்பெற்ற ஒரே கட்டிடம் இதுதான். இருப்பினும் மத்திய கிழக்கில் இருந்து பல கட்டிடங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
ஜோர்டானின் பெட்ரா 12 வது இடத்திலும் ஜெருசலேமில் உள்ள டோம் ஆஃப் தி ராக் (Dome of the Rock) 9 ஆவது இடத்திலும் உள்ளது.
சரி, அப்படி என்றால் முதலிடத்தில் இருப்பது? தாஜ்மகால். ஈடு இணையற்ற கட்டுமானமும் சொக்க வைக்கும் அழகையும் கொண்டுள்ள தாஜ்மகால் முதலிடம் பிடித்ததில் வியப்பெதுமில்லை.
