34.8 C
Dubai
July 11, 2020
UAE Tamil Web

துபாயில் மீண்டும் திறக்கப்பட்டது புர்ஜுமான் மால்..!

burjuman

துபாயின் புர்ஜுமான் மால் பார்வையாளர்களை வரவேற்பதற்காக அதனுடைய பணி நேரத்தை நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரையாக குறைத்து கடந்த புதன்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. அதே நேரம் அத்தியாவசிய சேவைகள் முன்பு போலவே நீட்டிக்கப்பட்ட மணிநேரங்களுடன் தொடர்ந்து இயங்கும் என்றும் புர்ஜுமான் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து புர்ஜுமான் மாலுக்கு வருகை தருபவர்கள் எல்லா நேரங்களிலும் முககவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி தனிநபர்கள் மாலுக்குள் செலவிடும் நேரத்தை அதிகபட்சம் மூன்று மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

புர்ஜுமான் நிர்வாகம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சுகாதாரம் மற்றும் சுத்திகரிப்பு வழக்கத்தை முன்பைவிட மேலும் அதிகரித்துள்ளது. இது தவிர அனைத்து வழிகாட்டுதல்களும் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக மால் முழுவதும் சுகாதார மற்றும் பாதுகாப்பு குறியீடுகளை(safety signages) வைக்கப்பட்டுள்ளது.

“எங்கள் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், சில்லறை கூட்டாளர்கள்(retail partners) மற்றும் பொது மக்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு எப்போதும் எங்களின் முன்னுரிமை ஆகும். அரசாங்கத்தால் சுகாதார நடைமுறைகளுக்காக பின்பற்றப்படும் சமூக இடைவெளி(social distance) போன்ற அனைத்து வழிகாட்டுதல்கள் மற்றும் துபாய் பொருளாதாரத் துறையின் (DED) புதுப்பிப்புகளையும் நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்” என்று நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

இறுதியாக, உடல்நிலை சரியில்லாத எவரும் தங்கள் முழு குடும்பத்தினரோடு அல்லது நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களோடு வீட்டிலேயே இருக்குமாறு புர்ஜுமான் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source: Khaleej Times

இதையும் படிங்க.!