துபாய் மக்களின் கண்களை கவரும் வகையில் மிக வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டது தான் சேக் ஜைத் சாலையில் உள்ள அருங்காட்சியகம்.
உலகிலேயே மிக அழகான கடிடங்களில் ஒன்றான இந்த அருங்காட்சியகம் சமீபத்தில் துபாயில் கட்டி முடிக்கப்பட்டது. இதுவரை யாரும் கண்டிடாத விதத்தில் வலைவான வட்ட வடிவில் அமைந்துள்ளதால் காண்போருக்கு என்ன கட்டிடம் என்றுக் கூட தெரியாமல் இருந்தது. அந்த அருங்காட்சியகத்தின் வெளிப்பகுதியில் அரபு மொழிகளால் பொறிக்கப்பட்டு, அதிலிருந்து ஒளி வருவதுபோல இருப்பதால், காண்போரின் கண்களை கவர்ந்து இழுக்கிறது.
இந்த அருங்காட்சியகத்தின் பெயர், “மியூசியம் ஆஃப் தி ஃபியூச்சர்” ஆகும். தற்போது இது இம்மாதம் 22 அன்று பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது.
الإخوة والأخوات.. أجمل مبنى على وجه الأرض ستطلقه الإمارات للعالم في 22/02/2022..
عام 2022 سيكون عاماً استثنائياً لدولة الإمارات العربية المتحدة بإذن الله.. pic.twitter.com/9CvCJnW5AV
— HH Sheikh Mohammed (@HHShkMohd) February 3, 2022
இது குறித்தான அறிவிப்பை, அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் வெளியிட்டுள்ளார். டிவிட்டரில், அருங்காட்சியகத்தை உலகின் மிகவும் அழகான கட்டிடம் என்றும் 2022 ஆம் ஆண்டு அமீரகத்திற்கு சிறந்த ஆண்டாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த “மியூசியம் ஆஃப் தி ஃபியூச்சர்” கட்டிடம் 2021 ஆம் ஆண்டில் National Geographic நிறுவனத்தால் உலகின் அழகான அருங்காட்சியகங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.