37.4 C
Dubai
August 10, 2020
UAE Tamil Web

கொரோனா எதிரொலி: குளோபல் வில்லேஜ் இசை நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு.!

global village concert postponed

துபாயின் குளோபல் வில்லேஜ் கடந்த செவ்வாயன்று (March 10 2020) இந்த சீசனுக்கான முடிவுசெய்யப்பட்ட மீதமுள்ள அனைத்து இசை நிகழ்ச்சிகளையும் ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.

கூட்ட நெரிசலான இடங்களில் கோவிட்-19 கொரோனா வைரஸ் அதிகம் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையை அடுத்து இது அறிவிக்கப்பட்டுள்ளது.

குளோபல் வில்லேஜில் மற்ற இயல்பான நடவடிக்கைகள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“எங்கள் மீதமுள்ள இசை நிகழ்ச்சிகளை சீசன் 25 வரை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம். இந்த நிகழ்வுகளில் அதிகளவு கூட்டத்தின் காரணமாக இந்த தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மற்றபடி இயல்பான செயல்பாடுகள் முழு வீச்சில் உள்ளன. மேலும் தினமும் மாலை 4 மணி முதல் ஏப்ரல் 4 வரை நிகழும் எங்கள் கடைசி வார வெளிப்புற ஷாப்பிங், டைனிங் மற்றும் பொழுதுபோக்குகளைப் பயன்படுத்திக்கொள்ள உங்களை அழைக்கிறோம்” என்று குளோபல் வில்லேஜின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தது.

இதையும் படிங்க.!