UAE Tamil Web

ஆர்ப்பரிக்கும் நெருப்பு ஊற்று : துபாய் குளோபல் வில்லேஜின் அடுத்த அதிரடி..!

fire foundain

துபாய் குளோபல் வில்லேஜ் வரும் அக்டோபர் 26 ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் புதுமையான வழிகளில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் குளோபல் வில்லேஜ், இந்த முறை நெருப்பு ஊற்றை (fire fountain) வடிவமைத்திருக்கிறது.

இதுகுறித்துப் பேசிய துபாய் குளோபல் வில்லேஜின் விருந்தினர் உபசரிப்புப் பிரிவின் மூத்த மேலாளர் முகமது இஷாக்,” ஒவ்வொரு வருடமும் புதுமையான நிகழ்ச்சிகளை எங்களது விருந்தினர்களுக்கு வழங்குவதே எங்களது சிறப்பாகும். கடந்தவருடம் அறிமுகப்படுத்தப்பட்ட  மிதக்கும் சந்தை (floating market), இம்முறை முக்கிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அதேபோல எங்களுடைய நெருப்பு நீரூற்று மற்றும் நேரடி நிகழ்ச்சிகளுக்கும் பிரத்யேக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 26 வது சீசனுக்காக அக்டோபரில் குளோபல் வில்லேஜின் கதவுகள் திறக்கப்பட இருக்கின்றன. அப்போது மக்களுக்கு பல இன்ப அதிர்ச்சிகளை அளிக்கவேண்டும் என்ற எங்களது முடிவின் துவக்கமே இன்று வெளிவந்த அறிவிப்பாகும்” என்றார்.

fire foundain
8 Shares
Share via
Copy link