UAE Tamil Web

துபாயில் திறக்கப்பட்ட ‘MUSEUM OF THE FUTURE’ அருங்காட்சியகம்: டிக்கெட் விலை எவ்வளவு..? முழு விபரம் உள்ளே

உலகின் மிக அழகான கட்டிடங்களில் ஒன்றான துபாயின் “மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர்” அருங்காட்சியகம் நேற்று 22.2.2022 திறக்கப்பட்டது.

அமீரகத்தின் துணை பிரதமரும், துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் மற்றும் ஷேக் மக்தூம் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஆகியோர் இந்த மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர் அருங்காட்சியகத்தை பிரம்மாண்ட முறையில் லைட்ஷோ உடன் திறந்து வைத்தனர்.

துபாயின் ‘மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர்’அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.motf.ae-ல் டிக்கெட்டுகளை முன்பதிவு பெற்றுக் கொள்ளலாம். பார்வையாளர்கள் 23-02-2022 இன்று முதல் அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை காணலாம்.

அருங்காட்சியகத்தைப் பார்வையிட நுழைவு டிக்கெட் விலை ஒரு நபருக்கு 145 திர்ஹம்ஸ் ஆகும். குழந்தைகள், மற்றும் அமீரகத்தின் மூத்த குடியுரிமை பெற்றவர்களுக்கு இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் எதிர்கால ஹீரோஸ் என்ற பகுதியை கண்டுகளிக்கலாம்.

Dubai's Museum of the Future. Photo: Supplied

இந்த அருங்காட்சியகமானது, 77 மீட்டர் உயரமும் 30,000 சதுர மீட்டர் பரப்பளவில் தூண்கள் இன்றி நீள்வட்ட வடிவில் ஏழு மாடிகளைக் கொண்டது.

துபாயின் மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர் அருங்காட்சியகத்திற்கு செல்லும் பார்வையாளர்கள் 2071 ஆம் ஆண்டில் பல்வேறு துறைகளில் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை ஆராயலாம் என்று கூறப்பட்டுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap