துபாயில் மிகப்பெரிய அளவில் புதிதாக திறக்கப்பட உள்ள IKEA ஸ்டோர்…!

Dubai's new Ikea store will offer rewards for its first customers when it opens this week (Photo: The National)

துபாயின் மிகப்பெரிய புதிய Ikea Store இந்த வாரம் திறக்கப்பட உள்ளது. இந்த திறப்புவிழா கொண்டாட்டத்தில், தனது முதல் வாடிக்கையாளர்களுக்கு சில அற்புதமான வெகுமதிகளையும் வழங்க இருக்கிறது.

அல்-புட்டெய்ம் தங்களது புதிய மால் ஆன, ஃபெஸ்டிவல் பிளாசாவை டிசம்பர் 18 புதன்கிழமை திறப்பதாக அறிவித்துள்ளது. இந்த மாலினுள் IKEA, ஏஸ் ஹார்டுவேர் மற்றும் லுலு ஹைப்பர் மார்க்கெட் உட்பட 120 விற்பனை மையங்கள் இருக்கும், அவைகளும் அதே தேதியில் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மால் துபாய் ஜெபல் அலி நகரில் அமைந்துள்ளது. இது துபாய் மெரினா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களும் எளிதில் செல்லக்கூடிய அளவிற்கு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மாலில் புதிதாக திறக்கப்படவுள்ள IKEA, அறிமுக சலுகையாக முதல் 1,000 வாடிக்கையாளர்கள், 1,000 திர்கம் வெல்லும் வாய்ப்பையும் வழங்கியுள்ளது. மேலும், 25 பரிசு அட்டைகளும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல், இந்த ஸ்டோரில் ஷாப்பிங் செய்யும் முதல் சில வாடிக்கையாளர்களுக்கு கிளாசிக் Ikea தயாரிப்புகள் இடம்பெறும் சிறப்பு ஆச்சரிய பரிசுகளும் உண்டு என்று அறிவிப்பு செய்துள்ளது.

Loading...