துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் புத்தாண்டை முன்னிட்டு துபாய் அரசு ஊழியர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.
அதில்,” அமீரகத்தின் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் வழிகாட்டுதலின்படியே வாழ்ந்துவரும் உங்களது பயணம் தொடரட்டும். அமீரகம் மற்றும் துபாயின் வளர்ச்சி உங்களுடைய அர்ப்பணிப்பில் மட்டுமே இருக்கிறது. அமீரக யூனியன் உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகளே ஆகின்றன. 50 ஆண்டுகளில் இத்தனை சாதனைகளை செய்த வேறு நாடுகளே கிடையாது. துபாயின் எதிர்காலம் உங்களது கைகளில் மட்டுமே இருக்கிறது. நமது குடிமக்கள், குடியிருப்பாளர்களுக்காக உழைப்பதே நமது கடமை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
.@HamdanMohammed sends a New Year’s Day message to the Government of #Dubai employees. pic.twitter.com/Vj1Qh8IE5I
— Dubai Media Office (@DXBMediaOffice) January 1, 2022
இத்துடன் ஊழியர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளையும் துபாய் இளவரசர் தெரிவித்துள்ளார்.