துபாய்: சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) 2022 புதிய ஆண்டுக்கான போக்குவரத்து அட்டவணையை வெளியிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 7 அன்று, அமீரகத்தில் நான்கரை நாட்கள் பணி நாட்களாக தீர்மானிக்க்ப்பட்டது. அதாவது வெள்ளிக்கிழமை பிற்பகல், சனி மற்றும் ஞாயிறு அன்று அனைத்து அரசு துறை அலுவலகங்களுக்கு விடுமுறை நாட்களாகவும், ஜனவரி 1, 2022 முதல் இது நடைமுறைக்கு வரும் எனவும் அமீரக அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளதாவது, புதிய நடைமுறைகள் ஜனவரி 3, 2022 திங்களான இன்று முதல் தொடங்கும் என தெரிவித்துள்ளது.
RTA கீழ் இயங்கும் போக்குவரத்தின் நேரங்கள் புதிய அட்டவணையின்படி கீழே குறிப்பிடப்பட்டுள்ளது:-
துபாய் மெட்ரோ:
- திங்கள் முதல் வியாழன் வரை காலை 5 முதல் 1.15am வரை.
- வெள்ளி மற்றும் சனிக்கிழமை காலை 5 முதல் 2.15am வரை.
- ஞாயிற்றுக்கிழமை காலை 8 முதல் 1.15am வரை.
இந்த அட்டவணையின்படி, துபாய் மெட்ரோ வழக்கம்போல் ரெட் மற்றும் கிரீன் லைன்களிலிருந்தே செயல்படும்.
துபாய் டிராம்:
- திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 6 மணி முதல் 1am மணி வரை.
- ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 1am மணி வரை.
துபாய் பேருந்து:
- திங்கள் முதல் வியாழன் வரை.
- வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பேருந்துகளுக்கு பொருந்தக்கூடிய அட்டவணையின் முறைப்படியே இயக்கப்படும்.
இலவச பார்க்கிங்:
- வெள்ளிக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பப்ளிக் பார்க்கிங் இலவசம் என்பதால், மறு அறிவிப்பு வரும் வரை தற்போது உள்ளன நடைமுறையில் செயல்படும்.
RTA-வின் முக்கிய அலுவலகங்கள்:
- திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.30 முதல் மதியம் 3.30 வரை.
- வெள்ளிக்கிழமை மட்டும் வேலை நேரம் காலை 7.30 முதல் மதியம் 12 மணி வரை.
- வார விடுமுறை சனி மற்றும் ஞாயிற்றுகிழமை.
இவ்வாறு சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (Roads and Transport Authority- RTA) இந்த ஆண்டுக்கான புதிய போக்குவரத்து அட்டவணையை வெளியிட்டுள்ளது.