UAE Tamil Web

துபாயில் மாற்றியமைக்கப்பட்ட பேருந்து சேவைகள்..! இன்று முதல் அமல்..!

bus

துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் பழைய பேருந்து வழித்தடம் ஒன்றினை ரத்து செய்து அதற்கு பதிலாக புதிய வழித்தடத்தை ஆரம்பித்துள்ளது.

- Advertisment -

இன்று முதல் (மார்ச் 10) தேராவிலிருந்து பர் துபாய் இடையிலான C07 பேருந்து வழித்தடத்தை ரத்து செய்து அதற்கு பதிலாக புதிய இரண்டு பேருந்து வழித்தடங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் நேற்று (செவ்வாய் கிழமை) தெரிவித்துள்ளது.

ரூட் 5 பேருந்து வழித்தடமானது அபு ஹெய்ல் மெட்ரோ ஸ்டேஷனிலிருந்து யூனியன் மெட்ரோ ஸ்டேஷன் மற்றும் பனியாஸ் தெரு வழியாக அல் கலிஜ் தெரு (கோல்டன் சவுக் பேருந்து நிலையம் எதிர்புறம்) வரை செல்லும்.

ரூட் 6 பேருந்து வழித்தடமானது அல் குபைபா பேருந்து நிலையத்திலிருந்து புதிதாக திறக்கப்பட்ட கலித் பின் வலீத் தெரு மற்றும் ஔத் மேத்தா பேருந்து நிலையம் வழியாக துபாய் ஹெல்த்கேர் சிட்டி வரை செல்கிறது.

தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள இந்த C07 பேருந்து வழித்தடத்தை ரூட் 5 மற்றும் ரூட் 6 பேருந்து வழித்தடங்கள் பூர்த்தி செய்கின்றன. அதாவது ரூட் 5 வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் தேராவின் அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும், ரூட் 6 வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் பர் துபாயின் அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் நிற்கும்.

இந்த இரண்டு வழித்தடங்களும் வளர்ந்து வரும் நகரமயமாக்கலின் தேவைக்காகவும் வளர்ச்சிக்காகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இன்றிலிருந்து மேலும் சில பேருந்து வழித்தடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன அவை என்னென்ன என்று பார்ப்போம்.

C07 ரத்து செய்துள்ளதால் அந்த வழித்தடத்தை பயன்படுத்திய பயனாளிகள் அனைவரும் அதற்கு பதிலாக ரூட் 5 மற்றும் ரூட் 6 ஐ பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் ரூட் 28 பேருந்து வழித்தடமானது துபாய் மால் தொடங்கி லேம்ஸி பிளாசா வரை இருந்தது. ஆனால் தற்போது இந்த வழித்தடமானது ஔத் மேத்தா பஸ் நிலையம் வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ரூட் 367 எடிசலாட்டிலிருந்து அல் ரஷிதியா, அல் வர்க்கா, இன்டர்நேஷனல் சிட்டி, துபாய் அக்கடமிக் சிட்டி மற்றும் துபாய் சிலிக்கான் ஒயாசிஸ் வழியாக சென்ற பேருந்து வழித்தடமானது தற்போது மிர்திஃப் சிட்டி சென்டர் வழியாக மிர்திஃப் பகுதி முழுவதற்கும் செல்லும் அளவிற்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ரூட் C18 ஷேக் ரஷீத் காலனியிலிருந்து லேம்ஸி பிளாசா வரை சென்ற வழித்தடமானது தற்போது மாற்றியமைக்கப்பட்டு ஔத் மேத்தா பேருந்து நிலையம் வரை செல்லும்.

ரூட் F03 ரஷிதியாவிலிருந்து மிர்திஃப் வரை சென்ற பேருந்து வழித்தடமானது தற்பொழுது மிர்திஃப் பகுதி முழுவதும் உள்ள அதிக இடங்களுக்கு பயணிகள் பயணிக்கும் படி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ரூட் F10 அல் ரஷிதியாவிலிருந்து மிர்திஃப் வழியாக அல் வர்க்கா வரை சென்ற பேருந்து வழித்தடமானது தற்போது மாற்றி அமைக்கப்பட்டு மிர்திஃப் சிட்டி சென்டர் வழியாக மிர்திஃப் பகுதி முழுவதற்கும் பயணிகளை ஏற்றி செல்லும்.

ரூட் F70 பேருந்து வழித்தடமானது புதிதாக புதிதாக கட்டப்பட்ட ஔத் மேத்தா பேருந்து நிலையம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் ரூட் X23 பேருந்து வழித்தடமானது கோல்டு சவுக் பேருந்து நிலையத்தில் முடிவடைந்து விடும் ஆனால் தற்பொழுது கூட்ட நேரிசல் அதிகமாக உள்ள நேரத்தில் (peak time) அல் குபைபா பேருந்து நிலையம் வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கூட்ட நேரிசல் குறைவாக இருக்கும் பொழுது (off- peak) ஔத் மேத்தா பேருந்து நிலையம் வரை செல்லும்.