36.9 C
Dubai
May 25, 2020
UAE Tamil Web

பொதுப் போக்குவரத்திற்கான நேரத்தில் மாற்றம் கொண்டுவந்துள்ள துபாய் போக்குவரத்து ஆணையம்!

rta

துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் ( Roads and Transport Authority ) பொதுப் போக்குவரத்திற்கான (டிராம், பேருந்து, கடல் வழிப் போக்குவரத்து, டாக்ஸி மற்றும் பகிர் – போக்குவரத்து) சேவை நேரத்தில் மாற்றம் கொண்டுவந்திருக்கிறது. மேலும், வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் மற்றும் சேவை மையங்களுக்கும் இந்த நேர மாற்றம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நேர மாற்றம், தேசிய சுத்திகரிப்பு பணிகளுக்கான திருத்தப்பட்ட நேரமான மாலை 8 மணியிலிருந்து காலை 6 மணிவரை என்பதனை உறுதிசெய்கிறது.

பொதுப் போக்குவரத்து நிலையங்கள் மற்றும் மையங்களில் (வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் மற்றும் சேவை மையங்கள்) கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும் எனவும் ஆணையம் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது.

தங்களது பாதுகாப்பிற்காக மட்டுமல்லாமல், போக்குவரத்துப் பணியாளர்கள் மற்றும் ஆப்பரேட்டர்களின் பாதுகாப்பு கருதியும் பிரயாணிகள் அனைவரும் முகக் கவசங்களை அணிய வேண்டும் எனவும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மெட்ரோ : காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை இயங்கும்.

டிராம் : காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை இயங்கும்.

டாக்ஸி : காலை 8.30 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும்.

உள்நகரப் பேருந்து : உரிய அறிவிப்பு வரும் வரையில் உள்நகரப் பேருந்துகள் இயக்கப்படாது.

பேருந்து : துபாய் பேருந்துகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும்.

இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரையில் குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்படும். (மருத்துவமனைகளுக்கு மட்டும்)

மிக முக்கிய சேவை வழித்தடங்கள் (இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை)

bus
Image Credit : khaleejtimes

மற்ற சில பதிவுகள்