UAE Tamil Web

துல்கர் சல்மானுக்கு கோல்டன் விசா – ரசிகர்கள் குதூகலம்!

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் திறமைசாலிகளுக்கு அமீரக அரசு பத்து ஆண்டுகளுக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்து வருகிறது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், புகழ்பெற்ற மலையாள நடிகர் மம்முட்டி ஆகியோருக்கு அண்மையில் கோல்டன் விசா வழங்கி அமீரக அரசு கவுரவித்தது. அவர்களை தொடர்ந்து மலையாள நடிகர்கள் டொவினோ தாமஸ், பிரித்விராஜ் ஆகியோருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மம்மூட்டியின் மகனும் இளம் சினிமா நட்சத்திரமுமான துல்கர் சல்மானுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது. ஐக்கிய அமீரகத்தின் இந்த அங்கீகாரம் தனக்கு கிடைத்த பாக்கியம் என துல்கர் சல்மான் குறிப்பிட்டுள்ளார். திரைப்படம் மற்றும் தயாரிப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதிலும் சர்வதேச அளவிலும் புதிய திறமைகளை ஊக்குவிப்பதிலும் முனைப்பு காட்டுவதற்கு அபுதாபி அரசுக்கு துல்கர் சல்மான் பாராட்டு தெரிவித்தார்

2 Shares
Share via
Copy link