UAE Tamil Web

கூட்டத்தால் அலைமோதும் துபாய் விமான நிலையம் : மெட்ரோ 2 மணிநேரம் கூடுதலாக இயங்கும் என RTA அறிவிப்பு..!

metro

ஆகஸ்டு மாதத்தின் மத்தியில் துபாய் விமான நிலையம் வரலாறு காணாத கூட்டத்தை சந்திக்கும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் துபாய் விமான நிலையம் வரும் பயணிகளின் வசதிக்காக வரும் ஆகஸ்டு 27 ஆம் தேதி துபாய் மெட்ரோ கூடுதலாக 2 மணி நேரங்கள் இயக்கப்படும் என துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது.

அதன்படி ஆகஸ்டு 27 ஆம் தேதி காலை 10 மணிமுதல் அடுத்தநாள் காலை 3 மணிவரையில் துபாய் மெட்ரோவின் ரெட் மற்றும் கிரீன் லைன்களில் ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் தங்களுடன் இரண்டு சூட்கேஸ்கள் மற்றும் ஒரு கைப்பையை (Hand Luggage) எடுத்துச் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் போக்குவரத்துத் தேவையை பூர்த்தி செய்யவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக RTA தெரிவித்துள்ளது.

metro
0 Shares
Share via
Copy link