அபுதாபியில் பணியாற்றி வந்த கேரளாவைச் சேர்ந்த முன்களப் பணியாளர், இரண்டாம் அலையின்போது கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை மூலம் குணமாகி வீடு திரும்பியுள்ளார்.
2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அபுதாபியில் உள்ள எல்.எல்.எச் மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது அருண்குமாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு நுரையீரல் முற்றிலும் சேதமடைந்ததை அடுத்து தொடர் சிகிச்சையால் மூலம் குணமாகி நேற்று வீடு திரும்பியுள்ளார்.
கொரோனா பேரிடரின்போது முன்களப் பணியாளராக களத்திலிருந்து பணியாற்றிய போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு நுரையீரல் முற்றிலும் சேதமடைந்தது. ஒரு முறை மாரடைப்பும் ஏற்பட்டு, உயிருக்கு போராடிய அருண் குமாருக்கு, பல்வேறு அமைப்புகளும் நிதியுதவிகளை செய்தன. அவர் பூரண குணமடைந்து வீடு திரும்புவதை, மருத்துவமனை நிர்வாகவே விழா நடத்திக் கொண்டாடியது. அந்த விழாவின்போது, அவரிடம், நிதியுதவியும் வழங்கப்பட்டது. அது மட்டுமல்ல, மருத்துவ அமைப்புகள், அவரது மனைவிக்கு வேலை வழங்கவும், குழந்தைகளின் பள்ளிப் படிப்புக்கான செலவை ஏற்கவும் முன்வந்துள்ளன.
பாதிக்கப்பட்ட சேர்ந்த அருண்குமார் நாயர் கூறுகையில், எனக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால் ஒன்றே ஒன்று தெரியும், மரணத்தின் பிடியிலிருந்து நான் நூலிழையில் தப்பிவந்துள்ளேன். நான் உயிருடன் இருக்கிறேன் என்றால் அது எனது குடும்பத்தின், நண்பர்களின் பிரார்த்தனைதான் காரணம் என்கிறார்.
அருண்குமார் நாயர் அபுதாபியில் உள்ள எல்.எல்.எச் மருத்துவமனையில் 2013ஆம் ஆண்டிலிருந்து பணியாற்றி வருகிறார். அவருக்கு கொரோனா பாதிப்பு கடுமையானதைத் தொடர்ந்து அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எக்மோ கருவி மூலம் மட்டுமே அவரால் சுவாசிக்க முடிந்தது. அதனால்தான் அருண் குணமடைந்தது எல்லோருக்கும் அதிசயம்” என அவருக்கு சிகிச்சையளித்து வந்த இதய நோய் மருத்துவர் தாரிக் கூறுகிறார்.
இந்நிலையில் அவர் இந்தியா திரும்பி தனது குடும்பத்தினரை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.