UAE Tamil Web

தூக்கி வீசப்பட்ட 13 வயது சிறுவன் – ஸ்கூட்டரில் சாலையைக் கடக்கும் போது நேர்ந்த பரிதாபம்..!

Stock-Sharjah-Police_

கோர் ஃபக்கானின் ஜுபரா பகுதியில் இ – ஸ்கூட்டரில் சாலையைக் கடக்கும்போது வாகனம் மீது மோதியதில் 13 வயது எமிராட்டி சிறுவன் பலத்த காயமடைந்ததாக ஷார்ஜா போலீசார் சனிக்கிழமை இரவு தெரிவித்துள்ளனர்.

கிழக்கு பிராந்திய காவல் துறையின் இயக்குநர் கர்னல் டாக்டர் அலி அல்-கே அல்-ஹமூடி இதுகுறித்துப் பேசுகையில், “கிழக்கு பிராந்திய காவல் துறையின் செயல்பாட்டு அறைக்கு சனிக்கிழமை மாலை அவசர அழைப்பு வந்தது. 13 வயது சிறுவன் ஒருவன் சாலையில் இ-ஸ்கூட்டரில் சாலையைக் கடக்கும்போது வாகனம் ஒன்றில் மோதி விபத்து ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போக்குவரத்து ரோந்து மற்றும் தேசிய ஆம்புலன்ஸ், விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்றபோது, ​​சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவர் கோர் ஃபக்கான் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்” என்றார்.

மருத்துவமனையில் சிறுவன் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் மின்சார ஸ்கூட்டர்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மிதிவண்டிகளைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக ஷார்ஜாவில் போக்குவரத்து மற்றும் ரோந்துத் துறை சமீபத்தில் மிகப்பெரிய பிரச்சாரத்தைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Stock-Sharjah-Police_
0 Shares
Share via
Copy link