UAE Tamil Web

அமீரகத்தில் அதிகரிக்கும் E-Scooter தொடர்பான விபத்துகள்.. சட்டதிட்டங்களை முறையாக கடைபிடிக்க வலியுறுத்தல் – ஹெல்மெட் போடுங்கப்பா!

அமீரகத்தில் உள்ள சில மருத்துவமனைகள், மின் ஸ்கூட்டர் மூலம் நடக்கும் விபத்துக்களால் ஏற்படும் காயங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன. வாகன ஓட்டிகள் ஹெல்மெட், எல்போ பேட் அணிந்து போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அமீரகத்தை பொறுத்தவரை “எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஒரு புதுமையான மற்றும் வேகமாக விரிவடையும் போக்குவரத்து வடிவமாகும். இருப்பினும், மின்-ஸ்கூட்டர் விபத்துகளால் பலருக்கு காயங்கள் ஏற்படுவதை நாம் காண்கிறோம்”.

தெருக்களுக்கு ஸ்கூட்டர்களை எடுத்துச் செல்வதற்கு முன் பல காரணிகளை ஓட்டுபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். வெளியிடப்பட்ட ஆய்வுகளின்படி, 80 சதவீத காயங்கள் ஸ்கூட்டரில் செல்லும்போதும் பள்ளத்தில் மோதி அல்லது நடைபாதையில் மோதியதால் ஏற்படும் காயங்கள் தான்.

பிற வாகனம் அல்லது அருகில் உள்ள பொருட்கள் மீது மோதி ஏற்படும் காயங்கள் இந்த E Scooter விவகாரத்தில் குறைவாகவே உள்ளது ”என்று மீடியோர் மருத்துவமனையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஷிபு வர்கீஸ் கூறினார்.

டாக்டர் வர்கீஸ், மின்-ஸ்கூட்டர்களை ஓட்டுவதற்கு நல்ல அளவிலான ஒருங்கிணைப்பு மற்றும் திறமையும் தேவை என்று குறிப்பிட்டார்.

டாக்டர் ராகவேந்திரா கே. சித்தப்பா (ஆஸ்டர் மருத்துவமனை), குசாய்ஸ், எலும்பியல் நிபுணர் கூறுகையில், இ-ஸ்கூட்டர் ஓட்டுபவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் மற்றும் தெருக்களில் வேகத்தை நிர்வகித்து செல்ல வேண்டும் என்று கூறினார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap