UAE Tamil Web

புஜைராவில் லேசான நிலநடுக்கம் – மக்கள் பயப்படத் தேவையில்லை என அரசு அறிவிப்பு..!

EARTHQUAKE

திப்பா புஜைராவில் நேற்று இரவு 9.14 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கமானது 1.9 ஆகப் பதிவாகியிருக்கிறது. மக்கள் லேசான அதிர்வை உணர்ந்ததாகவும் இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தேசிய வானிலை மையத்தின் நில அதிர்வு வலையமைப்பு தெரிவித்துள்ளது.

அமீரகத்தின் வட பகுதியில் உள்ள ஹஜார் மலைத்தொடரில் அவ்வப்போது லேசான நிலநடுக்கம் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

EARTHQUAKE
1 Share
Share via
Copy link