சுற்றுச்சூழலுக்கு உகந்த சுற்றுலாவை மேன்படுத்தும் அடுத்த கட்டத்தை நோக்கி ஒரு படி எடுத்து வைத்துள்ளது நமது அமீரகம். துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஆஸ்திரேலிய பேருந்து தயாரிப்பு நிறுவனமான BusTech குழுவுடன் இணைந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் Zero-Emission பேருந்தின் செயல்பாட்டை சோதிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த பேருந்து சேவை துபாயின் நிலையான பொது போக்குவரத்து அமைப்புக்கு உதவும், அதே சமயம் இது துபாயின் தட்பவெப்ப சூழலை கண்காணிக்கவும் உதவும்.
சோதனை ஓட்டத்தின் போது, பேருந்து வழங்கும் சேவைகளை மேம்படுத்த ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளின் கருத்துகள் பதிவு செய்யப்படும். தொழில்நுட்பத்தின் உதவியுடன், துபாயின் சுற்றுச்சூழளுக்கு உகந்த போக்குவரத்து அமைப்புடன் தடையின்றி ஒருங்கிணைக்கப்பட்ட கருவிகளுடன் பேருந்து இயக்கப்படும்.
#RTA has signed an agreement with the Australian bus manufacturer BusTech Group to test the operation of an eco-friendly, zero-emission electric bus to verify its operational feasibility in Dubai’s climatic environment.https://t.co/6pqh6VIL3f pic.twitter.com/pKOrH3ehVp
— RTA (@rta_dubai) July 4, 2022
RTA மற்றும் குயின்ஸ்லாந்து அரசு பிரதான சாலைகள் இடையே கையெழுத்தான முதல் ஒப்பந்தம் இதுவாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை பேணுவதற்காக இது மேற்கொள்ளப்படுகிறது. இதனால், எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனங்களின் தேவை மற்றும் விநியோகம் அதிகரிக்க வழிவகுக்கிறது.
RTA தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.