துபாயில் Wi-Fi மற்றும் USB மொபைல்ஸ் சார்ஜர் வசதிகள் கொண்ட அதிநவீன புதிய பேருந்துகள் அறிமுகம் !

Eco-friendly buses have been added to Dubai's public transport services !

துபாய் அரசு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் புதிதாக 94 பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) சார்பில் 94 புதிய நவீன வசதிகள் கொண்ட பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் சிறப்பம்சம் எரிபொருள் மிக சிக்கனமான எடுத்துக்கொள்ளும்.

இந்த நவீன பேருந்துகளை துபாய் போக்குவரத்து துறை அதிகாரி மாத்தர்-அல்-தயார் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மேலும், இதிலிருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடின் அளவு மிகவும் குறைவாக இருக்கும் என்பது இதன் கூடுதல் சிறப்பம்சம் ஆகும். இதை தவிர மாற்றுத்திறனாளிகள் அமரும் வகையில் 3 இருக்கையும் இதில் இடம்பெற்றுள்ளன.

32 பயணிகள் அமரும் இருக்கைகளையும், 9 பயணிகள் நிற்கும் வசதியுடன் கூடிய இந்த பேருந்தில், மாற்று திறனாளிகள் சக்கர நாற்காலி ஏற்றும் அளவிற்கு சாய்ந்த படிகளை கொண்டுள்ளது.

மேலும் இந்த பேருந்துகள் எடை குறைவாகவும், நீளம் நடுத்தர அளவு கொண்டதாகவும் அமைந்துள்ளது. 17 வழித்தடங்களில் இந்த பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 8 வழி தடங்கள் பழையதும், 9 வழித்தடங்கள் புதியவையும் ஆகும்.

இதில் LED அறிவிப்பு பலகைகள், Wi-Fi வசதி மற்றும் USB மொபைல்ஸ் சார்ஜர் வசதிகள் இந்த பேருந்தில் இடம்பெற்றுள்ளது.

போக்குவரத்து ஆணைய அதிகாரி கூறுகையில், சர்வதேச தரத்தில் துபாய் போக்குவரத்து துறை உயர்த்தும் வகையிலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் இது அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Loading...