அதிக வேலை வாய்ப்பளிக்கும் எக்ஸ்போ 2020 துபாய்.! ஒரு முழுமையான அறிக்கை.!

expo 2020 survey

அக்டோபர் 20, 2020 முதல் ஏப்ரல் 20, 2021 வரை இயங்கும் எக்ஸ்போ 2020, உலகெங்கிலும் இருந்து 25 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்ட 190 பங்கேற்பு நாடுகளை வரவேற்க உள்ளது.

தற்போது இந்த மாபெரும் எக்ஸ்போ 2020 நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கருதுகின்றனர் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

யூகோவின் (YouGov) புதிய கணக்கெடுப்பு, ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்களில் பெரும்பான்மையானோர் (67 சதவீதம்) கண்காட்சியில் கலந்து கொள்ள அதிக உற்சாகத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகக் காட்டுகிறது.

எக்ஸ்போவைப் பார்வையிட வாய்ப்புள்ளவர்களில், நாட்டின் இளைய தலைமுறையை காட்டிலும் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள அதிக வாய்ப்புள்ளது.

எக்ஸ்போவைப் பார்வையிட வேலை செய்யாத குடியிருப்பாளர்களை விட (72 சதவீதம் vs 51 சதவீதம்) உழைக்கும் தொழில் வல்லுநர்கள் தான் அதிகம் ஆர்வமுள்ளவர்களாக காட்டுகிறது. அதுமட்டுமின்றி திருமணமான குடியிருப்பாளர்கள், குறிப்பாக குழந்தைகளுடன் இருப்பவர்கள், இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் ஒற்றை நபர்களை (Singles) விட அதிகம் அர்வம் காட்டுகிறார்கள் என்றும் இந்த ஆய்வில் தெரிகிறது.

இந்த நிகழ்விற்கு வருகை தருபவர்களில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் (52 சதவீதம்) எக்ஸ்போவை அதன் துவக்கத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். அதே நேரத்தில் ஏழு பேரில் ஒருவர் (15 சதவீதம்) நிறைவு விழாவிற்கு வர வாய்ப்புள்ளது என்று யூகோவ் கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.

ஐந்தில் இரண்டு (40 சதவீதம்) குறிப்பிட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்வார்கள் என்றும் பத்தில் ஒருவர் (10 சதவீதம்) பங்கேற்பாளரின் மதிப்புரைகளைச் விசாரித்த பின்னரே கொண்டாட்டத்தில் சேருவார்கள் என்றும் மற்றும் 10 சதவீதம் மக்கள் அவர்களின் வருகையைப் பற்றி உறுதியாக தெரியவில்லை எனவும் இந்த ஆய்வு காட்டுகிறது.

ஆய்வாளர்கள் கூற்றுப்படி, எக்ஸ்போ அடுத்த ஒரு ஆண்டில் துபாய் பொருளாதாரத்தின் வளர்ச்சியை நான்கு சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பொருளாதார நடவடிக்கைகள் கட்டுமானம், உள்துறை பொருத்தம், வங்கி, விருந்தோம்பல், விமான போக்குவரத்து, நிகழ்வு மேலாண்மை மற்றும் எஃப் அண்ட் பி துறைகள் போன்றவற்றின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

வகை வாரியான அறிக்கை (Category wise Report)

 • பெரும்பாலான ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் (52 சதவீதம்) எக்ஸ்போவில் புதுமைகளை அனுபவிக்க ஆர்வமாக உள்ளனர்.
 • பெவிலியன்களில் கலாச்சாரம் மற்றும் கல்வி (தலா 38 சதவீதம்) காட்சியைக் காண பலர் உற்சாகமாக உள்ளனர்.
 • எக்ஸ்போவில் புதுமைகளை ஆராய்வதில் பெண்களை விட அதிகமான ஆண்கள் ஆர்வம் காட்டுகின்றனர் (55 சதவீதம் vs 45 சதவீதம்). ஆண்களை விட அதிகமான பெண்கள் எக்ஸ்போவின் கலாச்சார அம்சத்தில் ஆர்வமாக உள்ளனர் (46 சதவீதம் vs 34 சதவீதம்).
 • எக்ஸ்போவில் (35 சதவீதம்) கணிசமான எண்ணிக்கையிலான ஆண்கள் விளையாட்டு நிகழ்வுகளை எதிர்நோக்கியுள்ளனர். அதே நேரத்தில் ஏராளமான பெண்கள் கட்டிடக்கலை (41 சதவீதம்) மற்றும் இசை (33 சதவீதம்) ஆகியவற்றை அனுபவிக்க ஆர்வமாக உள்ளனர்.

டிக்கெட் வாரியான அறிக்கை (Ticket wise Report)

 • பத்தில் மூன்று பேர் (29 சதவீதம்) ஒரு நாள் டிக்கெட்டை விரும்புகிறார்கள்
 • கால் பகுதிக்கு மேல் (26 சதவீதம்) மூன்று நாள் நுழைவுச் சீட்டை (Three days Multiple-entry tickets) வாங்க திட்டமிட்டுள்ளனர்.
 • ஐந்தில் ஒருவர் (21 சதவீதம்) மாதாந்திர டிக்கெட் பாஸை (Monthly Ticket Pass) விரும்புகிறார்கள்.
 • பத்தில் ஒருவர் (9 சதவீதம்) மட்டுமே ஆறு மாத பாஸ் முழுவதையும் வாங்க ஆர்வம் காட்டியுள்ளனர்.

எக்ஸ்போவின் நன்மைகளைப் பற்றிய அறிக்கை (Benefit of Dubai Expo Report)

 • ஐக்கிய அரபு அமீரக மற்றும் துபாயின் பொருளாதாரத்தை உயர்த்துவதாக ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் (55 சதவீதம்) தெரிவித்தனர்.
 • இது வருங்கால முதலீடுகளை ஈர்க்கும் என பலர் (51 சதவீதம்) நினைத்துள்ளார்கள்.
 • நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் என பலர் (50 சதவீதம்) கூறியுள்ளார்கள்.
 • ஒரு வணிக மையமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் நற்பெயரை மேம்படுத்தும் என பலர் (49 சதவீதம்) கருதுகிறார்கள்.
 • அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க வழிவகுக்கும் என்றும் பலர் (48 சதவீதம்) நினைக்கிறார்கள்.
 • விருந்தோம்பல், ரியல் எஸ்டேட் மற்றும் பொழுதுபோக்கு துறையை உற்சாகப்படுத்தும் என்று அரபு வெளிநாட்டினர் (47 சதவீதம்) மிகவும் நம்பிக்கையுடன் உள்ளனர்.

மாவட்டம் 2020 (District 2020) பற்றி கேட்டபோது, ​​அது என்னவென்று 28 சதவீதம் பேருக்கு மட்டுமே தெரிந்தது. 36 சதவிகிதத்தினர் இதைப் பற்றி அறிந்திருக்கவில்லை. மேலும் 36 சதவிகிதத்தினர் அதைக் கேள்விப்பட்டிருக்கிறார்கள், ஆனால் அது என்னவென்று முழுமையாகத் தெரியவில்லை என்று இந்த அறிக்கை முடிவடைகிறது.

>>மாவட்டம் 2020 பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள்

Loading...