37.4 C
Dubai
August 10, 2020
UAE Tamil Web

ஹஜ் பெருநாள் தொழுகைக்கான நேரங்களை வெளியிட்டது அமீரக அரசு..!

eid al adha

கொரோனா பாதிப்பு காரணமாக அமீரகம் முழுவதும் உள்ள மசூதிகள் மற்றும் முசல்லாக்களில் (திறந்தவெளி தொழுகையிடங்கள்) ஹஜ் பெருநாளுக்கான (ஈத் அல் அத்ஹா) சிறப்பு தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரார்த்தனையாளர்கள் தங்களது வீடுகளில் தனியாகவோ, குடும்ப உறுப்பினர்களுடனோ தொழுகையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமீரகம் முழுவதிலும் உள்ள மசூதிகள் தொழுகைக்கு முன்பு ஈத் தக்பீரை (Eid Takbeer) நேரலையில் ஒளிபரப்பும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 31 ஆம் தேதி எப்போது நீங்கள் தொழுகைக்கு தயாராக இருத்தல் வேண்டும்? அமீரகம் முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட இருக்கும் ஹஜ் பெருநாள் தொழுகைக்கான நேரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • அபுதாபி – காலை 6.07 மணி
  • அல் அய்ன் – காலை 6.01 மணி
  • மதினாத் சயீத் – காலை 6.12 மணி
  • துபாய் – காலை 6.03 மணி
  • ஷார்ஜா – காலை 6.02 மணி
  • அஜ்மான் – காலை 6.02 மணி
  • உம் அல் குவைன் – காலை 6.01 மணி
  • ராஸ் அல் கைமா – காலை 5.59 மணி
  • புஜைரா – காலை 5.58 மணி

ஹஜ் பெருநாளை முன்னிட்டு குர்பானியானது காலை 6.30 மணியிலிருந்து (அபுதாபி நேரப்படி) பெருநாளின் இரண்டாம் நாள் சூரிய அஸ்தமனம் வரையிலும் நடைபெறலாம் என இஸ்லாமிய விவகாரத்துறை மற்றும் நன்கொடை நிறுவல் ஆணையம் (Authority of Islamic Affairs & Endowments) தெரிவித்திருக்கிறது.

இதையும் படிங்க.!