UAE Tamil Web

இந்திய சங்கத்துடன் இணைந்து நடந்த பெருநாள் கொண்டாட்டம்.. அமீரகத்தில் தொழிலாளர்களுக்கு ஈத் விருந்து – மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்ட ஊழியர்கள்

சஜா தொழிலாளர் முகாமில் வசித்து வரும் ஊழியர்களுக்கு நேற்று சனிக்கிழமையன்று சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. அவர்களுக்கு அருகாமையில் உள்ள தொழிலாளர் பூங்காவில் ஈத் அல் அதா பெருநாள் சிறப்பு வழிபாடு நடக்கும் இடமாக மாற்றப்பட்டதால் இந்த சிறப்பு உபசரிப்பு அவர்களுக்கு அளிக்கப்பட்டது.

சுமார் 4,000 தொழிலாளர்கள் அமீரகத்தில் முதல் முறையாக பொழுதுபோக்கு பூங்காவில் ஈத் தொழுகையை நடத்தினர். பின்னர் அவர்கள் தங்கள் சகாக்களுடன் பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். ஷார்ஜா தொழிலாளர் தரநிலைகள் மேம்பாட்டு ஆணையம், இந்திய சங்கத்துடன் இணைந்து, ‘தொழிலாளர்களுடன் ஈத் அல் அதா’ என்ற தலைப்பில் இது நடத்தப்பட்டது.

அங்கு இருந்த தொழிலாளர்களுக்கு ஒரு பாட்டில் தண்ணீர் மற்றும் ஒரு டப் Kheer வழங்கப்பட்டது. மேலும் பிரியாணி, ஜூஸ் மற்றும் பல உணவுப்பொருட்கள் அடங்கிய கிட்டத்தட்ட 5,000 உணவுப் பொட்டலங்களில் ஒரு பகுதி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

அமீரக Red Cross Society மற்றும் அல் ஹராமைன் பெர்ஃப்யூம்ஸ் ஆகியவை இணைந்து தொழிலாளர்களுக்கு பரிசு பொருட்களையும் வழங்கினார். “எங்களுக்கு பரிசு பொருட்கள் கிடைத்தன, அதில் தொப்பிகள், புத்தகங்கள், முகமூடிகள் மற்றும் ஒரு புதிய ஆடை ஆகியவை இருந்தன” என்று சஜாவில் வசிக்கும் அமீர் பெய்க் என்ற ஊழியர் கூறினார்.

சுகாதார பரிசோதனைகளை தொடர்ந்து தொழிலாளர்கள் கைப்பந்து விளையாட்டு மற்றும் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap