அமீரகத்தில் ஈத் அல் அதா பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது, இந்த கொண்டாட்டங்கள் 12ம் தேதி வரை தொடரவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஈத் பண்டிகையை முன்னிட்டு அமீரகத்தில் பல சலுகைகளை வழங்கி வருகின்றது பல்வேறு நிறுவனங்கள்.
இதன் ஒரு பகுதியாக Emirates Airlines தனது வாடிக்கையாளர்களை கவனித்துக்கொள்ள சிறப்பு சலுகையை இன்று முதல் (ஜூலை 9) தொடங்கியுள்ளது. பெருநாளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு விமான வகுப்பிலும் பயணிகளுக்கான சிறப்பு மெனுவை விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட இந்த உணவுகள் ஜூலை 9 முதல் ஜூலை 12 வரை நான்கு நாட்களுக்கு வழங்கப்படும் என்று விமான நிறுவனங்கள் அறிவித்தன. ஈத்-அல்-அதா என்பது உலகெங்கிலும் உள்ள இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களால் கொண்டாடப்படும் இரண்டாவது பெரிய விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
In celebration of Eid Al Adha and in honour of our proud Emirati heritage, we will be serving traditional and much-loved Eid dishes on our flights from 9 to 12 July. https://t.co/3Xm88FCoXp pic.twitter.com/BvfTnkiSuy
— Emirates Airline (@emirates) July 7, 2022
எமிரேட்ஸ்ன் சிறப்பு ஈத் அல்-அதா மெனு அதனுடைய விமானத்தின் 60 வழித்தடங்களில் வழங்கப்படும். மேலும், மெனுவில் ஒவ்வொரு கேபினுக்கும் தனித்தனியே பாரம்பரிய ஈத் உணவுகள் உள்ளன. இந்தியா, வளைகுடா பகுதி, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு செல்லும் அனைத்து விமானங்களும் இதில் அடங்கும்.
ஈத் முதல் மற்றும் இரண்டாவது நாளில் பயணம் செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களும் அவர்கள் எடுத்துச் செல்லும் வகையில் இனிப்புகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.