37.4 C
Dubai
August 10, 2020
UAE Tamil Web

ஈத் அல் அத்ஹா பண்டிகையையொட்டி இலவச பார்க்கிங் திட்டத்தை அறிவித்தது அஜ்மான் அரசு..!

ajman

அஜ்மான் : ஈத் அல் அத்ஹா பண்டிகையை முன்னிட்டு இலவச பார்க்கிங் திட்டத்தினை அறிவித்திருக்கிறது அஜ்மானின் நகராட்சி மற்றும் திட்டத்துறை.

ஜூலை 30 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 2 ஆம் தேதிவரையில் அஜ்மான் முழுவதும் உள்ள அனைத்து கட்டண பார்க்கிங் இடங்களிலும் மக்கள் இலவசமாக தங்களது வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம் என எமராட் அல் யோம் ( Emarat Al Youm) செய்தி நிறுவனம் அறிவித்திருக்கிறது.

திங்கட்கிழமை முதல் மீண்டும் பார்க்கிங் கட்டணங்கள் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபி, ஷார்ஜா மற்றும் துபாயைத் தொடர்ந்து தற்போது அஜ்மானிலும் இலவச பார்க்கிங் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விடுமுறை நாட்களை பாதுகாப்புடன் மக்கள் கழிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக அஜ்மான் காவல்துறை தெரிவித்திருக்கிறது. ஈத் நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் உணவு மற்றும் சுகாதார நிறுவனங்களில் பாதுகாப்பு விதிமுறைகள் சரியான முறையில் பின்பற்றப்படுகின்றனவா என்பதனைக் கண்காணிக்க ஆய்வாளர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பாளர்கள் முகக்கவசம், தனி மனித இடைவெளி, கூட்டம் கூடுவதைத் தவிர்த்தல் போன்ற விதிமுறைகளை கடைபிடிக்கவேண்டும் எனவும் விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!