UAE Tamil Web

துபாய்: ஈத் அல் அத்ஹாவை முன்னிட்டு 4 நாட்களுக்கு இலவச பார்க்கிங் திட்டம் அறிவிப்பு..!

parking

துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஈத் அல் அத்ஹா விடுமுறையை முன்னிட்டு மக்கள் இலவச பார்க்கிங் வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மல்டி லெவல் பார்க்கிங் தவிர அனைத்து பொதுப் பார்க்கிங் இடத்திலும் ஈத் அல் அத்ஹா விடுமுறை நாட்களான ஜூலை 19 முதல் ஜூலை 22 வரை இலவசமாக மக்கள் தங்களது வாகனங்களை பார்க்கிங் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

parking
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap